ஈடர்ன் கார்டன் கிரிக்கெட் திடலில் நடைபெறும் நடப்பு ஐபிஎல் தொடரின் 65-ஆவது போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். காயம் காரணமாக சில போட்டிகளில் அவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கெனவே வெளியேறிய நிலையில், கொல்கத்தா அணிக்கு ஒரு வாய்ப்பிருக்கிறது. அதனால், இந்தப் போட்டி முக்கியமானதாக இருக்கிறது.
கொல்கத்தா 11 புள்ளிகளுடன் 8ஆவது இடத்தில் இருக்கிறது. மும்பை 8 புள்ளிகளுடன் 9ஆவது இடத்தில் இருக்கிறது. மும்பை அணி தனது கடைசி 2 போட்டிகளில் வெற்றியுடன் செல்ல ஆயுத்தமாக இருக்கிறது.
கொல்கத்தா அணியில் எந்த மாற்றமும் இல்லை. மும்பை அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மழைக்குப் பிறகு நடைபெறும் போட்டி என்பதால் இரு அணிகளின் கேப்டன்களுமே பந்துவீச எதிர்பார்ப்புடன் இருப்பதாக டாஸின்போது கூறினார்கள்.
மும்பை: ரோஹித் சர்மா, ரிக்கெல்டன், நமன் திர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா, வில் ஜாக்ஸ், கார்பின் போஷ், தீபக் சஹார், பும்ரா, ரகு சர்மா.
கொல்கத்தா: அஜிங்க்யா ரஹானே, ரகுவன்ஷி, கேமரூன் கிரீன், ரோமன் பவல், மணீஷ் பாண்டே, ரிங்கு சிங், சுனில் நரைன், அனுகுல் ராய், கார்த்திக் தியாகி, வருண் சக்ரவர்த்தி, சௌரப் துபே.
Summary
Hardik Pandya Returns: Kolkata Bowls; Mumbai Bats!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









