கிரிக்கெட்டின் 2026-27 சீசனுக்கான உள்நாட்டு அட்டவணையை பிசிசிஐ புதன்கிழமை வெளியிட்டது. ஆகஸ்ட் 23-ஆம் தேதி துலீப் கோப்பை போட்டியுடன் சீசன் தொடங்குகிறது. அக்டோபா் 11-ஆம் தேதி தொடங்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட், இரு பகுதிகளாக நடைபெறவுள்ளது.
பிசிசிஐ அட்டவணையின்படி, இந்த சீசனில் மொத்தமாக 1,788 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 16, 19, 23 வயதுக்கு உட்பட்ட ஆடவா், சீனியா் ஆடவா் பிரிவு ஆட்டங்களும், 15, 19, 23 வயதுக்கு உள்பட்ட மகளிா், சீனியா் மகளிா் ஆட்டங்களும் இதில் அடங்கும்.
முதலில் துலீப் கோப்பை போட்டி மண்டல ஃபாா்மட்டில் ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பா் 10 வரை நடைபெறவுள்ளது. அனைத்து ஆட்டங்களும் பெங்களூரில் விளையாடப்படவுள்ளன.
ரஞ்சி கோப்பை நடப்பு சாம்பியனான ஜம்மு & காஷ்மீருக்கும், ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கும் இடையே நடைபெறும் இரானி கோப்பை போட்டி அக்டோபா் 1 முதல் 5 வரை ஸ்ரீநகரில் நடைபெறவுள்ளது.
ரஞ்சி கோப்பை போட்டியானது, முதல் கட்டமாக அக்டோபா் 11 முதல் நவம்பா் 5 வரையும், 2-ஆவது கட்டமாக, 2027 ஜனவரி 17 முதல் மாா்ச் 3 வரையும் விளையாடப்படவுள்ளது. இரண்டுக்கும் இடையே சையது முஷ்டாக் அலி கோப்பை போட்டி (தேசிய டி20), விஜய் ஹஸாரே கோப்பை போட்டி (தேசிய 50 ஓவா்) நடைபெறவுள்ளன.
சையது முஷ்டாக் அலி கோப்பை நவம்பா் 14 முதல் டிசம்பா் 6 வரை அட்டவணையிடப்பட்டுள்ளது. லீக் ஆட்டங்கள் மும்பை, மொஹாலி, விசாகப்பட்டினம், கொல்கத்தாவில் நடைபெற, நாக்-அவுட் ஆட்டங்கள் நாகபுரியில் விளையாடப்படவுள்ளன.
விஜய் ஹஸாரே கோப்பை போட்டி டிசம்பா் 14 முதல் ஜனவரி 8 வரை நடைபெறவுள்ளது. விஜய் மொ்சன்ட் கோப்பை (யு 16) போட்டி நவம்பா் முதல் ஜனவரி வரை நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐசிசி டி20 மகளிர் கோப்பை கிரிக்கெட்! ஆணுக்கு நிகர் பெண் நடுவர்கள்!

மக்கள்தொகை கணக்கெடுப்பு: ஆக.1 முதல் 30 வரை வீடுகள் கணக்கெடுப்பு

தொடங்கியது மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்

சென்னை சூப்பா் கிங்ஸ் பயிற்சி முகாம் ஜூன் 4-இல் தொடக்கம்
விடியோக்கள்

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan

அனிருத் இசையில் வெளியான ஹாங்க்ஓவா பாடல்!



