உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஹார்திக் பாண்டியாவுக்கு 10% அபராதம்..! ஒரு தகுதி இழப்புப் புள்ளியும் வழங்கல்!

மும்பை அணியின் கேப்டனுக்கு விதிக்கப்பட்ட அபராதம் குறித்து...

Mumbai Indians' captain Hardik Pandya leaves the ground after losing his wicket during the Indian Premier League cricket match between Kolkata Knight Riders and Mumbai Indians, in Kolkata , India, Wednesday, May 20, 2026. (AP Photo/Bikas Das)

ஹார்திக் பாண்டியா. - படம்: ஏபி

Published On :

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கு போட்டிக்கான ஊதியத்திலிருந்து 10 சதவிகிதம் அபராதமும் ஒரு தகுதி இழப்புப் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு ஈடர்ன் கார்டன் திடலில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 147/8 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய கொல்கத்தா 18.5 ஓவர்களில் 148/6 ரன்கள் எடுத்து வென்றது.

இந்தப் போட்டியில் மும்பை அணியினர் குறிப்பிட்ட நேரத்தை விடவும் மெதுவாகப் பந்துவீசியதால் அதன் கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கு லெவல் 1 குற்றத்திற்காக போட்டிக்கான ஊதியத்திலிருந்து 10 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசும்போது ஹார்திக் பாண்டியா 10ஆவது ஓவர் நான்காவது பந்தின்போது ஸ்டம்பின் மேலிருந்த பெயில்ஸ்களை தள்ளிவிடுவார். இது ஐபிஎல் விதிமீறல் 2.2ன் படி ஹார்திக் பாண்டியாவுக்கு ஒரு தகுதி இழப்புப் புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

ஐந்து முறை கோப்பை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த ஆறு சீசன்களாக கோப்பை வெல்லாமல் இருக்கிறது. அத்துடன் இந்த சீசனில் நான்கு வெற்றிகளை மட்டுமே பெற்று மோசமாகவும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

Hardik Pandya fined 10 per cent of match fee, handed one demerit point for knocking bails off

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.