அமைச்சராகிறார் ஐயூஎம்எல் ஷாஜகான்! - காதர் மொய்தீன் அறிவிப்புபுதிய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!அமைச்சர் செங்கோட்டையனின் துறை மாற்றம்!மனம் நொந்து அதிமுகவிலிருந்து விலகிவிட்டேன்: தனபால்!சீமான் - கயல்விழிக்கு பெண் குழந்தை! தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மீண்டும் மூன்றாமிடம்!
/

ஹார்திக் தலைமையில் மட்டும் சொதப்பும் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்..! என்ன காரணம்?

மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் ஹார்திக் பாண்டியா தலைமையில் மட்டும் சொதப்புவது குறித்து...

News image

மும்பை இந்தியன்ஸ் வீரர்கள். - படங்கள்: எக்ஸ் / மும்பை இந்தியன்ஸ்.

Updated On :21 மே 2026, 3:26 pm IST

மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் ஹார்திக் பாண்டியா தலைமையில் மட்டும் சொதப்பும் புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியையும் பல கேள்விகளையும் எழுப்பி வருகின்றன.

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 13 போட்டிகளில் நான்கில் மட்டுமே வென்று புள்ளிப் பட்டியலில் 9ஆவது இடத்தில் இருக்கிறது. ஏற்கெனவே, பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பிழந்து தொடரிலிருந்து வெளியேறியதும் குறிப்பிடத்தக்கது.

ஹார்திக் பாண்டியா தலைமையில் 2 போட்டிகளிலும் சூர்யகுமார், பும்ரா தலைமையில் தலா 1 போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் வென்றுள்ளன.

ஹார்திக் தலைமையில் ரோஹித் சர்மா 4 போட்டிகளில் 117 ரன்களும் மற்றவர்கள் (சூர்யகுமார், பும்ரா) தலைமையில் 166 ரன்களும் எடுத்துள்ளார். சராசரி 29லிருந்து 41.50ஆக மாற்றம் இருக்கிறது.

அதேபோல் திலக் வர்மாவும் ஹார்திக் தலைமையில் 9 இன்னிங்ஸில் 213 ரன்கள் (சராசரி 26) மற்றவர்கள் (சூர்யகுமார், பும்ரா) தலைமையில் 4 இன்னிங்ஸில் 139 ரன்கள் (சராசரி 47.6) ரன்கள் குவித்துள்ளார். கிட்டதட்ட சராசரியாக 20 ரன்கள் அதிகமாக எடுத்துள்ளார்.

சூர்யகுமார் யாதவ் அவருடைய கேப்டன்சியில் மட்டும் அரைசதம் அடித்தார். மற்றவர்கள் யாருடைய கேப்டன்சியில் விளையாடினாலும் மிகவும் சுமாராகவே விளையாடி இருக்கிறார்.

இதிலிருந்து மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் ஹார்திக் தலைமையில் சரியாக விளையாடுவதில்லை என்பது நிரூபணமாகிறது.

இது வேண்டுமென்றே வீரர்களால் திட்டமிட்டு நடக்கிறதா அல்லது இயல்பாகவே வீரர்கள் செய்கிறார்களா என்பதை அணியின் நிர்வாகமே கண்டறிய வேண்டியிருக்கிறது.

Summary

Mumbai Indians players falter only under Hardik's captaincy! What is the reason?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.