தமிழ்நாடு அணிக்கு ஹாட்ரிக் வெற்றி..! இன்னிங்ஸ் வித்தியாசத்தில் சண்டீகரை வீழ்த்தியது!
ரஞ்சி கோப்பையில் அபார வெற்றியைப் பதிவு செய்த தமிழ்நாடு அணி குறித்து...

சண்டீகர், தமிழ்நாடு அணிகளின் இலச்சினை - படம்: எக்ஸ் / பிசிசிஐ டொமஸ்டிக்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி சண்டீகரை இன்னிங்ஸ் மற்றும் 259 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இத்துடன் ஹாட்ரிக் வெற்றியும் கிடைத்துள்ளது.
முதலில் தமிழ்நாடு அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 571 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர், தனது இன்னிங்ஸை விளையாடிய சண்டீகர், 94 ரன்களுக்கு நிறைவடைந்தது.
முதல் இன்னிங்ஸில் தமிழ்நாடு பந்துவீச்சாளர்களில் சோனு யாதவ் 4, சரவணகுமாா், சாய் கிஷோர் ஆகியோா் தலா 2, குா்ஜப்னீத் சிங் 1 விக்கெட் கைப்பற்றினர்.
முதல் இன்னிங்ஸில் 477 ரன்கள் பின்தங்கிய சண்டீகா், ‘ஃபாலோ ஆன்’ பெற்று 2-ஆவது இன்னிங்ஸை விளையாடியது. நேற்றைய முடிவில் 189 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இன்றை நாளில் மீதமிருந்த 3 விக்கெட்டுகளையும் இழந்து சண்டீகர் 259 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. இதில் அதிகபட்சமாக அர்ஜுன் அசாத் 60 ரன்கள் எடுத்தார்.
இரண்டாம் இன்னிங்ஸில் தமிழ்நாடு பந்துவீச்சாளர்களில் eஸ். அஜித் ராம் 7 விக்கெட்டுகள் எடுத்து மிரட்டினார். இவர் முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் 115 ரன்கள் அடித்ததும் குறிப்பிடத்தக்கது.
முதல் இன்னிங்ஸில் இரட்டைச் சதம் அடித்த பிரதோஷ ரஞ்சன் பால் ஆட்ட நாயகனாகத் தேர்வானார். இந்த வெற்றியுடன் தமிழ்நாடு 20 புள்ளிகளுடன் குரூப் டி பிரிவில் இரண்டாமிடத்தில் இருக்கிறது.
Tamil Nadu Won by an innings and 259 Run(s) #UTCAvTN #RanjiTrophy #Elite Scorecard:https://t.co/cekCFegeEA
— BCCI Domestic (@BCCIdomestic) November 5, 2026
Summary
Ranji Trophy: A hat-trick of wins for the Tamil Nadu team..! They defeated Chandigarh by an innings margin!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


