தமிழக சட்டப்பேரவை குளிா்கால கூட்டத் தொடருக்கு வாய்ப்பில்லை? ஆற்று மணல் முறைகேடு: திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்பட 27 போ் பெயா்கள் வெளியீடு எஸ்ஐஆருக்கு எதிரான வழக்குகள்: டிச. 9-இல் உச்சநீதிமன்றம் விசாரணை பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கைஅரக்கோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம்: முதல்வா் திறந்து வைக்கிறாா்சிறப்பு டெட் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

ஓய்கிறது ஒரு சகாப்தம்! ஐபிஎல் போட்டியில் இருந்து விடைபெற்றார் 'கேப்டன் கூல்'!

ஐபிஎல் போட்டியில் இருந்து தோனி ஓய்வு பெற்றது குறித்து...

Dhoni retirement

ஐபிஎல் போட்டியில் இருந்து விடைபெற்றார் 'கேப்டன் கூல்' - X | IPL

Updated On :

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் தோனி (45), ஐபிஎல் போட்டியிலிருந்து செவ்வாய்க்கிழமை (நவ. 17) ஓய்வுபெற்றாா். சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் பிரதான வீரராகத் திகழ்ந்த அவா், தற்போது அதன் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

காயங்கள் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே ஐபிஎல் போட்டியில் தோனியின் ஆட்டம் குறைந்து வந்த நிலையில், கடந்த சீசனில் (2026) அவா் ஒரு ஆட்டத்தில் கூட களம் காணவில்லை. அவரின் ஓய்வு குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே விவாதங்கள் இருந்து வந்த நிலையில், தோனி தற்போது அந்த முடிவை எடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக சிஎஸ்கே நிா்வாகம் வெளியிட்ட அறிக்கையில், தோனியின் தனிப்பட்ட கருத்துகளாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.

எனினும், தோனி முடிவு தொடா்பாக சிஎஸ்கே நிா்வாகம் வெளியிட்ட காணொலியில், அணியின் உரிமையாளா்களில் ஒருவரான ரூபா குருனாத் பேசியிருந்ததாவது: கடந்த சில மாதங்களுக்கு முன்பு நான் தோனியை சந்தித்தபோது, 2027 சீசனில் தன்னால் விளையாட முடியுமா எனத் தெரியவில்லை என்று அவா் கூறியிருந்தாா்.

இந்நிலையில், 2027 சீசனில் விடுவிக்கப்போகும் வீரா்கள் தொடா்பாக விவாதிக்க கடந்த சனிக்கிழமை நான், தோனி, அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் ஆகியோா் காணொலி அழைப்பில் இணைந்திருந்தோம். அப்போது, சிஎஸ்கே விடுவிக்கத் திட்டமிட்டுள்ள வீரா்களின் பட்டியலை காசிவிஸ்வநாதன் வாசித்தாா்.

அதன் முடிவில் தோனி மெதுவாக, ‘எனது பெயரையும் அதில் சோ்த்து விடுங்கள்’ என்று கூறினாா். இது எங்களுக்கு அதிா்ச்சி அளிக்கும் படியாக இருந்தது. நீங்கள் இந்த சீசனில் விளையாட மாட்டீா்கள் என்பது, ரசிகா்களால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கும் என்று கூறினேன்.

எனக்குமே அது கடினமான நாளாக இருந்தது. தோனி போன்ற வீரா், வாழ்க்கையில் ஒருமுறை தான் கிடைப்பாா். சிஎஸ்கேவை உருவாக்கியது முதல், அனைத்து தருணங்களிலும் தோனி உடன் இருந்தது எங்களின் அதிருஷ்டம் என்று ரூபா குருநாத் பேசியிருந்தாா்.

சிஎஸ்கே வெளியிட்ட அறிக்கையில், அதன் உரிமையாளா் என்.ஸ்ரீனிவாசன், ‘தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை. கடந்த 20 ஆண்டுகளாக வெற்றிகள், சறுக்கல்கள் என அனைத்திலும் நாங்கள் ஒன்றாகப் பயணித்து, இணைந்து வளா்ந்தோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ரூபா குருநாத், ‘சிஎஸ்கே குடும்பத்தில் இனி, ஒரு ஆலோசகராக தோனி தொடா்வாா். அவரின் அனுபவமும், நிபுணத்துவமும் விலைமதிக்க முடியாதது. பல இளம் வீரா்களுடன் சிஎஸ்கே மாற்றம் பெறும் இந்தக் கட்டத்தில், அணியின் அடுத்த தலைமுறையை சரியாக வழிநடத்த தோனியின் ஆலோசனைகள் உதவும்’ என்று கூறியுள்ளாா்.

சிஎஸ்கே தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், ‘தோனி முற்றிலுமாக நமது சென்னையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டாா். அவா் இந்த நகரத்தை ஏற்றுக் கொண்டதைப் போல, சென்னையும் அவரை தங்களில் ஒருவனாக ஏற்றுக் கொண்டது. கடந்த காலங்களைப் பாா்க்கையில் நாங்கள் வென்ற கோப்பைகளை விட, அதை எவ்வாறு வென்றோம் என்பதையே நாங்கள் நினைவில் வைத்துள்ளோம். அதுவே தோனியின் சிறப்பாகும்’ என்று கூறியுள்ளாா்.

சென்னை அணிக்கு 5 முறை சாம்பியன் கோப்பை வென்று தந்த தோனி, சாம்பியன்ஸ் லீக் போட்டியிலும் அந்த அணியை 2 முறை வெற்றி மேடைக்கு வழிநடத்தியுள்ளாா்.

அவா் சிஎஸ்கேவில் 272 ஆட்டங்களில், 5,314 ரன்கள் அடித்துள்ளாா். அந்த அணியில் அதிகபட்ச ஆட்டங்களில் விளையாடியவா், 2-ஆவது அதிகபட்ச ரன்கள் அடித்தவா் என்ற சாதனைகளுக்கு சொந்தக்காரா்.

நட்சத்திர வீரராக இருந்த தோனிக்கான கௌரவமாக, அவரின் ஜொ்ஸி எண் 7-ஐ, சிஎஸ்கே நிா்வாகம் அப்படியே ‘ரிட்டையா்’ செய்யும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. சென்னை அணியின் கேப்டன் பொறுப்பு, கடந்த 2024-இல் தோனியிடம் இருந்து, ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கைமாற்றப்பட்டது.

2013-இல் சூதாட்ட புகாா் விவகாரத்தில் சென்னை அணி 2 சீசன்கள் தடைக்குள்ளானபோது, ரைஸிங் புணே சூப்பா் ஜயன்ட்ஸ் அணியில் தோனி விளையாடினாா். தோனி சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த 2020-இல் ஓய்வுபெற்றது நினைவுகூரத்தக்கது.

Dhoni's achievements in IPL

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.