பாலிவுட்டில் அறிமுகம்... மும்பையில் தேநீர் தயாரிக்கும் கெவின் பீட்டர்சன்!
இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் பதிவு குறித்து...

மும்பையில் தேநீர் தயாரிக்கும் கெவின் பீட்டர்சன் - படம்: எக்ஸ் / கெவின் பீட்டர்சன்
இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் மும்பையில் தேநீர் கடை ஒன்றில் வேலை பார்க்கும் போன்ற ஒரு புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்தப் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. டேவிட் வார்னர் போல இவரும் இந்திய சினிமாவில் களமிறங்குவார் என பாலிவுட் ரசிகர்கள் கமெண்டுகளில் கூறி வருகிறார்கள்.
கெவின் பீட்டர்சன் இந்திய நாட்டின் மீதும் இந்தியர்கள் மீதும் மிகுந்த பற்று வைத்துள்ளார். கிரிக்கெட்டினை தொடர்ச்சியாக பின்தொடரும் இவர் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார்.
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இவரிடம், “எப்போது பாலிவுட்டில் அறிமுகம்?” எனக் கேட்டு வந்தார்கள். இந்த நிலையில், தனது யூடியூப் பக்கத்தின் படப்பிடிப்புக்காக மும்பையில் தேநீர் கடையில் இருக்கும் புகைப்படத்தினைப் பகிர்ந்துள்ளார்.
இந்தப் படத்துடன், “பாலிவுட்டில் களமிறங்கச் சொல்லி கேட்டுக்கொண்டே இருந்தீர்கள் அல்லவா? நாங்கள் அதனை கவனித்துள்ளோம். இன்று அறிமுகமாகியுள்ளேன்” எனக் கூறி அத்துடன் சிரிக்கும் எமோஜியையும் பகிர்ந்துள்ளார்.
இந்தப் பதிவில் இந்திய ரசிகர்கள், “உடனடினாக கெவினுக்கு ஆதார் கார்டு கொடுக்க வேண்டும்” எனவும் சிலர், “பயிற்சியாளராக இருந்து நடிக்க வந்துவிட்டீர்களா?” எனவும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
கெவின் பீட்டர்சன் பலமுறை இங்கிலாந்துக்காரரை விடவும் அதிகமாக இந்தியர் போல நடந்துக்கொளவதாகக் கூறி வருகிறார்கள். அவரும் அதற்கேற்க இந்திய கலாச்சாரம், மீம்ஸ்களையும் பகிர்ந்து வருகிறார்.
You asked me to get into Bollywood â we listened & i am making my debut today! ð®ð³â¤ï¸ð¤£ pic.twitter.com/BSb7zrDvES
— Kevin Pietersenð¦ (@KP24) November 20, 2026
Summary
Making my debut today: Kevin Pietersen jokes about making his Bollywood debut
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


