சென்னை போக்சோ நீதிமன்றத்தில் வீரமணி ஆஜர்!அரிசி விலை உயர்வு இன்னும் ஆட்சியாளர்களின் காதுகளுக்கு எட்டவில்லை போலும்! பெ. சண்முகம்பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய்! மக்களிடம் மனுக்களைப் பெற்றார்!மாதவரம் ஆவின் பால் பண்ணை ஆய்வகக் கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!ராகுல், பிரியங்கா மீது தில்லி காவல்துறை வழக்குப்பதிவு!ரெப்போ வட்டி விகிதம் 5.50% ஆக உயர்வு! வீட்டு, வாகன கடன் வட்டி அதிகரிக்க வாய்ப்பு!‘தவெக ஆட்சியில் மின்வெட்டை மிஞ்சும் அரிவாள் வெட்டு’ - மு.க. ஸ்டாலின் கண்டனம்

ஐசிசி தரவரிசையில் தன்னுடைய உச்சம் தொட்ட ஷ்ரேயாஸ் ஐயர்..! 18 இடங்கள் முன்னேற்றம்!

இந்தியாவின் டி20 கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஐசிசி தரவரிசையில் தன் உச்சபட்ச இடத்துக்கு முன்னேறியுள்ளது குறித்து...

Shreyas Iyer delighted after scoring a century.

சதம் அடித்த மகிழ்ச்சியில் ஷ்ரேயாஸ் ஐயர் - படம்: பிசிசிஐ

Published On :

இந்தியாவின் டி20 கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஐசிசி டி20 தரவரிசையில் 18 இடங்கள் முன்னேறி தனது உச்சபட்ச இடத்துக்கு வந்திருக்கிறார்.

ஒருநாள் தரவரிசையில் இந்திய கேப்டன் ஷுப்மன் கில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 8 இடங்கள் முன்னேறி 46ஆவது இடம் பிடித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய மே.இ.தீ. அணி 19.1 ஓவர்களில் 171 ரன்கள் குவிக்க, இந்தியா 14.4 ஓவர்களில் இலக்கை எட்டியது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 43 பந்துகளில் 102 ரன்கள் குவித்து அசத்தினார். நீண்ட நாள்களாக ஃபார்மில் இல்லாத ஷ்ரேயாஸ் ஐயருக்கு இது ஆசுவாசத்தை அளித்துள்ளது.

இந்த சதத்துடன் டி20 தரவரிசையில் 18 இடங்கள் முன்னேறி 7ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதுதான் அவரது உச்சபட்ச டி20 தரவரிசை என்பது குறிப்பிடத்தக்கது. டாப் 10ல் இந்திய வீரர்கள் நால்வர் இடம்பிடித்துள்ளார்கள்.

ஐசிசி டி20 தரவரிசை

1. இஷான் கிஷன்

2. அபிஷேக் சர்மா

3. சாஹிப்சாதா ஃபர்ஹான்

4. ஹாரி புரூக்

5. ஜாஸ் பட்லர்

6. டெவால்டு பிரேவிஸ்

7. ஸ்ரேயாஸ் ஐயர்

8. பில் சால்ட்

9. பதும் நிசாங்கா

10. திலக் வர்மா

Summary

India T20 captain Shreyas Iyer reaches a career-high in ICC rankings..! A jump of 18 places!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.