நியூசி. ஆடுகளங்களை தென்னாப்பிரிக்க ஆடுகளங்களுடன் ஒப்பிடுவதா? கம்பீருடன் முரண்படும் ஷ்ரேயாஸ் ஐயர்!
நியூசிலாந்து ஆடுகளங்களை தென்னாப்பிரிக்க ஆடுகளங்களுடன் ஒப்பிட முடியாது என இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருடன் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் - படம் | பிசிசிஐ
நியூசிலாந்து ஆடுகளங்களை தென்னாப்பிரிக்க ஆடுகளங்களுடன் ஒப்பிட முடியாது என இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான ஒருநாள் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. பே ஓவலில் நேற்று (நவம்பர் 15) நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது.
இந்திய அணி தொடரைக் கைப்பற்றிய போதிலும் நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி மிகவும் மோசமான தோல்வியைத் தழுவியது. அப்போது, ரன்கள் குவிக்காதது எனக்கு கவலையளிக்கவில்லை, வீரர்கள் கடைசி வரை நிலைத்து நின்று விளையாடாதது மிகுந்த கவலையளிப்பதாக அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்திருந்தார். மேலும், ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்காவிலும் இதுபோன்ற சூழலே இருக்கும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நியூசிலாந்து ஆடுகளங்களை தென்னாப்பிரிக்க ஆடுகளங்களுடன் ஒப்பிட முடியாது எனவும், இரண்டு அணிகளுமே பேட்டிங்கில் தடுமாறியது எனவும் இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நாங்கள் நியூசிலாந்தில் இருக்கிறோம். அதனால், தென்னாப்பிரிக்காவில் உள்ள சூழலை ஒப்பிட முடியாது. அங்குள்ள வானிலை வித்தியாசமாக இருக்கும். பேட்டிங்கைப் பொருத்தவரையில், இரண்டு அணிகளுக்குமே பேட்டிங் சிறப்பாக அமையவில்லை. பந்துவீச்சில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. நியூசிலாந்து அணியும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டது. ஆடுகளம் பந்துவீச்சுக்கு உகந்ததாக இருந்தது. தொடரை வெல்வதே எங்களது இலக்காக இருந்தது. நாங்கள் தொடரை வென்றுவிட்டோம். அதனால், மற்ற விஷயங்கள் எதையும் நாங்கள் அதிகம் யோசிக்கவில்லை என்றார்.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான ஒருநாள் தொடர் நிறைவடைந்துவிட்ட நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
Summary
Indian team captain Shreyas Iyer has stated that New Zealand pitches cannot be compared to South African pitches.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


