ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

குல்தீப் யாதவை பிளேயிங் லெவனிலிருந்து நீக்கியது ஏன்? அஸ்வின் கேள்வி!

இந்திய அணியின் பிளேயிங் லெவனிலிருந்து குல்தீப் யாதவை நீக்கியது ஏன் என ரவிச்சந்திரன் அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார்.

படம் | பிசிசிஐ

Updated On :

இந்திய அணியின் பிளேயிங் லெவனிலிருந்து குல்தீப் யாதவை நீக்கியது ஏன் என ரவிச்சந்திரன் அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையில் இதுவரை நான்கு போட்டிகள் நிறைவடைந்துள்ளன. நான்காவது டி20 போட்டி நேற்று (அக்டோபர் 14) ஹைதராபாதில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகள் பெற்று சமநிலையில் உள்ளன.

ரவிச்சந்திரன் அஸ்வின்

ரவிச்சந்திரன் அஸ்வின் - கோப்புப் படம்

இந்த நிலையில், டி20 தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனிலிருந்து குல்தீப் யாதவை அணி நிர்வாகம் நீக்கியது ஏன் என ரவிச்சந்திரன் அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆடுகளங்களில் பவுன்சர் அதிகமாக இருக்கும் என்பதால், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஆடுகளங்கள் எப்போதும் உகந்ததாக இருக்காது. ஆனால், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பேட்டர்கள் குல்தீப் யாதவுக்கு எதிராக விளையாடத் தடுமாறினார்கள். அப்படிப்பட்ட வீரரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்கியது சரியான முடிவாகத் தெரியவில்லை. அவர் பிளேயிங் லெவனில் இருந்திருந்தால் 15-20 ரன்களை தவிர்த்திருக்கலாம் என்றார்.

முதல் இரண்டு டி20 போட்டிகளில் பிளேயிங் லெவனில் இடம்பெற்ற குல்தீப் யாதவ், அடுத்த இரண்டு போட்டிகளில் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. முதல் டி20 போட்டியில் 33 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவர், இரண்டாவது போட்டியில் 53 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

டி20 தொடருக்கு முன்பாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணிக்காக குல்தீப் யாதவ் அதிக விக்கெட்டுகளைக் (7 விக்கெட்டுகள்) கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Summary

Ravichandran Ashwin has questioned why Kuldeep Yadav was left out of the Indian team's playing eleven.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.