பிரேசில்
கோஸ்டா ரிகா
சுவிட்சர்லாந்து
செர்பியா
இந்த பிரிவில் இருந்து பிரேசில், சுவிட்சர்லாந்து அணிகள் அனைத்து சுற்றுக்கு தகுதிபெறும்.
முக்கிய வீரர்கள், நிலவரம்
சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்து அணி கடந்த 1954-ம் ஆண்டு மட்டுமே உலகக் கோப்பையில் நாக் அவுட் சுற்றில் வென்றுள்ளது. ஆனால் தொடர்ந்து தகுதிச் சுற்று ஆட்டங்களில் மட்டுமே ஆடியது. கடந்த 2009-இல் 17 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற பெரும்பாலான அனுபவம் நிறைந்த வீரர்கள் தற்போதைய அணியில் இடம் பெற்றுள்ளனர். 2018 உலகக் கோப்பையில் தகுதி பெற9 தொடர் வெற்றிகளுடன் சுவிட்சர்லாந்து இறுதியில் வட அயர்லாந்தை வென்று தகுதி பெற்றது. தற்காப்பு ஆட்டத்தில் சிறந்து விளங்கும் மானுவேல் அகான்ஜி உள்ளது அணிக்கு கூடுதல் பலமாகும்.
நட்சத்திர வீரர் வலோன் பெஹ்ராமி: தனது 4-வது உலகக் கோப்பையில் விளையாடும் வலோன் பெஹ்ராமி, இளம் வீரர்கள் கொண்ட அணிக்கு முன்னோடி போல் உள்ளார். போர்ச்சுலுக்கு எதிரான தகுதி ஆட்டத்தில் அவர் இல்லாததால் சுவிட்சர்லாந்து தோல்வியடைந்தது.
பயிற்சியாளர் விளாடிமிர் பெட்கோவிச்: போஸ்னியாவைச் சேர்ந்த விளாடிமிர் கடந்த 3 ஆண்டுகளாக அணியை வலிமையாக்கி கட்டுக்கோப்புடன் வைத்துள்ளார். குறைந்தபட்சம் காலிறுதி வரை முன்னேறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.
கோஸ்டா ரிகா
மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த மிகச் சிறிய நாடான கோஸ்டா ரிகா கடந்த 2014 உலகக் கோப்பையில் காலிறுதி வரை முன்னேறி, நியூஸிலாந்திடம் தோல்வியுற்றது. தற்போது 5-வது முறையாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ள 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த அணி சிறப்பாக விளையாடி வருகிறது. குறிப்பாக தாக்குதல் ஆட்டத்தில் பிரைஹன் ருயிஸும், நடுக்களத்தில் செல்சோ போர்ஜஸும் எதிரணிக்கு சவால் தருகின்றனர். எனினும் ஸ்பெயினுடன் நடந்த நட்பு ஆட்டத்தில் 5-
0 எனவும், ஹங்கேரியுடன் 1-0 எனவும் கோஸ்டாரிகா தோல்வியடைந்துள்ளது.
நட்சத்திர வீரர் கீலர் நவாஸ்: சிறந்த கோல்கீப்பர்களில் ஒருவரான கீலர் நவாஸ் அணியின் முக்கிய பலமாக உள்ளார். 2014 முதல் மாட்ரிட் அணியில் விளையாடி வருகிறார்.
பயிற்சியாளர் ஆஸ்கர் ராமிரெஸ்:
இவரது பயிற்சியின கீழ் ஆட்டத்திறன் மிக்கதாக மாறியுள்ள கோஸ்டா ரிகா அணி, கடந்த 2014 போட்டியில் பெற்ற நிலையை மீண்டும் அடைய கடுமையாக போராடும்.
பிரேசில்
5 முறை உலக சாம்பியனான பிரேசில் அணி கால்பந்து ஆட்டத்தின் ஜாம்பவான் அணிகளில் ஒன்றாகும். பீலே, ஸீகோ, ரொனால்டோ, நெய்மர் உள்ளிட்ட பல நட்சத்திர வீரர்கள் இடம் பெற்ற அணி. கடந்த 2014-ஆம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் பட்டம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அரையிறுதியில் ஜெர்மனியிடம் 7-1 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது பிரேசில். அந்த அதிர்ச்சியில் இருந்து அந்நாட்டு பொதுமக்கள், வீரர்கள் மீளுவதற்கு நீண்ட காலம் ஆகியது.
இந்நிலையில் 2018 உலகக் கோப்பை தென் அமெரிக்காவில் இருந்து முதலில் தகுதி பெற்ற அணி பிரேசில். பரம வைரியான ஆர்ஜென்டீனாவை 3-0 என தகுதிச் சுற்றில் வீழ்த்தியது. கடந்த 2016 முதல் புத்துணர்வு பெற்ற பிரேசில் அணி 13 வெற்றிகள், 3 டிரா, ஓரே ஒரு தோல்வி என அபாரமாக ஆடி வருகிறது.
நட்சத்திர வீரர் நெய்மர்:
அந்த அணியின் முக்கிய வீரராக நெய்மர் திகழ்கிறார். கடந்த சில மாதங்களாக காயத்தால் அவதிப்பட்ட அவர் உலகக் கோப்பையில் விளையாடுவதே சந்தேகமாக இருந்தது. தற்போது குணமடைந்து மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளார். ரஷியாவில் நடக்கும் போட்டியில் பிரேசில் வெல்லும் பட்சத்தில் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரை நெய்மர் பின்னுக்கு தள்ளி ஜொலிப்பார்.
பயிற்சியாளர்: அடேனோர் பாச்சி டைட் எனவும் அழைக்கப்படும் பயிற்சியாளர் பாச்சி அணியை வலுவாக கட்டமைத்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு போட்டியில் துங்கா பயிற்சியாளராக இருந்தபோது அந்த அணி நெய்மரையே பெரிதும் சார்ந்திருந்தது. ஆனால் தற்போது டைட் பயிற்சியில் அந்த அணி சிறப்பான அணியாக மிளிர்ந்து வருகிறது.
டாப் 10 நட்சத்திர வீரர்கள்: லியோனல் மெஸ்ஸி (ஆர்ஜென்டீனா)
வலுகுன்றிய அணியில் இடம்பெற்றுள்ள உலகின் தலைசிறந்த வீரர் என்ற பெயரை லியோனல் மெஸ்ஸி பெற்றுள்ளார். எந்த அணியாக இருந்தாலும், மெஸ்ஸி தனது திறமையான ஆட்டத்தால் போட்டியின் தன்மையையே மாற்றக்கூடியவர். அவர் இடம் பெற்றுள்ள பார்சிலோனா அணி இந்த லீக் சீசனில் ஓரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது. 34 கோல்களை அடித்தும், 12 கோல்களை அடிக்கவும் மெஸ்ஸி உதவினார்.
அவர் இடம் பெறும் அனைத்து அணிகளிலும் மெஸ்ஸியே பிரதான இடத்தைப் பெறுகிறார். அவர் இடம் பெறும் அணிகள் அனைத்தும் வெற்றி படிக்கெட்டில் பயணிக்கும் நிலையில், ஆர்ஜென்டீனா அணியும், மீண்டும் உலகக் கோப்பையை வெல்ல அவர் உதவுவார் என எதிர்நோக்கி உள்ளது.
செர்பியா
8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ள செர்பியா தகுதி ஆட்டங்களில் அயர்லாந்து, வேல்ஸ், ஆஸ்திரியா அணிகளை வீழ்த்தி முன்னேறியது. குறிப்பாக தனி நாடான பின்
2006-இல் முதன்முறையாக உலகக் கோப்பையில் விளையாடி 3-வது இடத்தை பெற்றது.நிகழாண்டு நடந்த தகுதி ஆட்டங்களில் செர்பியா 20 கோல்களை அடித்து வெற்றி நடை போட்டது. அலெக்சாண்டர் மிட்ரோவிக் அபாரமாக ஆடினார்.
நட்சத்திர வீரர் பிரானிஸ்லேவ் இவானோவிச்:
செயின்ட் பீட்டர்ஸ்பக் அணியில் விளையாடி வரும் பிரானிஸ்லேவ் தற்காப்பு ஆட்டத்தில் மலை போல் விளங்குகிறார். தற்காலியாக பயிற்சியாளராக லேடன் ஸ்டேஜிக் செயல்பட்டு வருகிறார்.
நட்பு ஆட்டங்கள்: பெல்ஜியத்திடம் 3-0 என வீழ்ந்தது
எகிப்து உலகக் கோப்பை போட்டிகளை ஒட்டி நடந்து வரும் நட்பு ஆட்டம் ஒன்றில் பெல்ஜியத்திடம் 3-0 என கோல்கணக்கில் எகிப்து அணி வீழ்ந்தது.
பிரஸ்ஸலிஸ் நடந்த நட்பு ஆட்டத்தில் அந்த அணியின் ஈடன் ஹசார்ட் சிறப்பான ஆட்டத்தால் பெல்ஜியம் அபார வெற்றி பெற்றது. குரூப் ஜி பிரிவில் இங்கிலாந்து, துனிசியா, பனாமாவுடன், பெல்ஜியம் இடம்பெற்றுள்ளது. நட்சத்திர வீரர் முகமது சலா காயத்தின் காரணமாக சிகிச்சை பெறும் நிலையில் எகிப்து படுதோல்வியை சந்தித்தது.
நார்வே-பனாமா
ஆஸ்லோவில் நடந்த மற்றொரு நட்பு ஆட்டத்தில் உலகக் கோப்பையில் சிறப்பாக ஆடலாம் என நோக்கில் வந்துள்ள பனாமா அணி 0-1 என நார்வே அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. உலகக் கோப்பைக்கு தகுதி பெறாத நிலையில் நார்வே அணி சிறப்பாக ஆடியது.
1986: சாம்பியன் ஆர்ஜென்டீனா
13-ஆவது உலகக் கோப்பை போட்டிகள் மெக்ஸிகோவில் 1986 மே 31 முதல் ஜூன் 29 வரை நடைபெற்றது. ஆர்ஜென்டீனா 3-2 என்ற கோல் கணக்கில் மேற்கு ஜெர்மனியை வீழ்த்தி 2-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த போட்டி வாய்ப்பு கொலம்பியாவுக்கு கிடைத்த நிலையில் பொருளாதாரம் சரியில்லாததால் அந்நாடு மறுத்து விட்டது. இதையடுத்து இரண்டாது முறையாக உலகக் கோப்பை போட்டியை மெக்ஸிகோ நடத்தியது.
9 நகரங்களில் நடந்த இப்போட்டியில் 24 அணிகள் பங்கேற்றன. அதிக உயரம் கொண்ட மலைப்பிரதேசத்தில் விளையாட்டு மைதானங்கள் அமைந்திருந்தது வீரர்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியது.
நூற்றாண்டின் சிறந்த கோல் (மாரடோனா)
இங்கிலாந்து-ஆர்ஜென்டீனா இடையிலான காலிறுதி ஆட்டத்தை கால்பந்து ரசிகர்களால் எளிதில் மறக்க முடியாது. முதல் பாதியில் ஆர்ஜென்டீனாவின் மாரடோனா நடுவர் பார்க்காத நிலையில் பந்தை கோல்கம்பத்துக்குள் லேசாக கையினால் தள்ளி விட்டார். அதை நடுவர் பார்க்காமல் கோலாக அறிவித்தார். இதை ஹேண்ட் ஆஃப் காட் கோல் (கடவுளின் கையால் அடிக்கப்பட்ட கோல்) என மாரடோனா வர்ணித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இரண்டாவது பாதியில் இங்கிலாந்து வீரர்கள் 5 பேரை கடந்து மாரடோனா அடித்த கோல் நூற்றாண்டின் கோல் என அழைக்கப்படுகிறது.
தகுதி, காலிறுதி ஆட்டங்கள் முடிந்த நிலையில் முதல் அரையிறுதியில் மேற்கு ஜெர்மனி 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வென்றது.
இரண்டாவது அரையிறுதியில் பெல்ஜியத்தை 2-0 என ஆர்ஜென்டீனா வீழ்த்தியது. இறுதி ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா 3-2 என மேற்கு ஜெர்மனியை வென்று 2-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி மாநகராட்சியின் நிலைக் குழு தலைவராக பாஜகவின் சத்யா ஷா்மா மீண்டும் தோ்வு
தங்க மங்கை சானு!

சிங்கப்பூரில் தாக்குதலுக்கு சதித் திட்டம்: 3 மாணவர்கள் கைது

பிகாரில் மாணவா்கள் மீது ஏ.கே. 47 துப்பாக்கிச்சூடு? ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு பாஜக மறுப்பு
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



