ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மும்பையிடம் தோல்வி: புள்ளிகள் பட்டியலில் கீழிறங்கிய சிஎஸ்கே!

இந்தத் தோல்வியின் மூலம், புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த சிஎஸ்கே, தற்போது இரண்டாம் இடத்துக்கு இறங்கியுள்ளது...

News image
Updated On :4 ஏப்ரல் 2019, 5:17 am

எழில்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் 15-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. மும்பையில், புதன்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய சென்னை 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களே எடுத்தது.

இந்தத் தோல்வியின் மூலம், புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த சிஎஸ்கே, தற்போது இரண்டாம் இடத்துக்கு இறங்கியுள்ளது. சென்னையும் பஞ்சாப்பும் 4 ஆட்டங்களில் 6 புள்ளிகள் பெற்றிருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் பஞ்சாப் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. நேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் மும்பை அணி 4 புள்ளிகளுடன் 6-ம் இடத்தில்தான் உள்ளது.

புள்ளிகள் பட்டியல்

 அணிகள் ஆட்டங்கள்  வெற்றி  தோல்வி  புள்ளிகள்  நெட்   ரன்ரேட் 
 பஞ்சாப்  4 3 1 6 +0.164
 சென்னை 4 3 1 6 -0.084
 ஹைதராபாத்  3 2 1 4 +2.111
 கொல்கத்தா 3 2 1 4 +0.555
 தில்லி 4 2 2 4 +0.215
 மும்பை 4 2 2 4 -0.087
 ராஜஸ்தான் 4 1 3 2 -0.333
 பெங்களூர் 4 0 4 0 -1.901

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.