யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஐபிஎல் வழியாக உலகக் கோப்பை வாய்ப்பைக் குறி வைக்கும் இளம் வீரர்!

மும்பையைச் சேர்ந்த 24 வயது ஷ்ரேயஸ் ஐயர் இந்திய அணிக்காக 6 ஒருநாள், 6 டி20 ஆட்டங்களில் இடம்பெற்றுள்ளார்...

News image
Updated On :19 மார்ச் 2019, 5:32 am

எழில்

மும்பையைச் சேர்ந்த 24 வயது ஷ்ரேயஸ் ஐயர் இந்திய அணிக்காக 6 ஒருநாள், 6 டி20 ஆட்டங்களில் இடம்பெற்றுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியில் 484 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 2-ம் இடம் பிடித்துள்ளார்.

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவது குறித்து டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் கூறியதாவது:

அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் நான் நன்றாக விளையாடி வருகிறேன். நான் ஐபிஎல் போட்டியிலும் நன்றாக விளையாடினால் என்னை அணியில் சேர்ப்பது குறித்து ஒன்றுக்கு இருமுறை யோசிப்பார்கள். தேர்வுக்குழு உறுப்பினரான ககன் கோடா என்னைச் சமீபத்தில் சந்தித்தார். நான் நன்றாக விளையாடி வருவதாகவும் தொடர்ந்து இதுபோல விளையாடவேண்டும் என்று அறிவுரை கூறினார் என ஷ்ரேயஸ் ஐயர் பேட்டியளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.