தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு! மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

ரிஷப் பந்துக்கு ஹிந்தி சொல்லிக் கொடுக்கும் தோனி மகள்! (விடியோ)

தோனியின் மகள் ஸிவாவுக்கு இன்ஸ்டகிராம் கணக்கு உள்ளது. ஆம், அது அதிகாரபூர்வக் கணக்கு...

News image
Updated On :11 மே 2019, 12:35 pm

எழில்

தோனியின் மகள் ஸிவாவுக்கு இன்ஸ்டகிராம் கணக்கு உள்ளது. ஆம், அது அதிகாரபூர்வக் கணக்கு. அதில் ஸிவாவின் புகைப்படங்கள், விடியோக்கள் அடிக்கடி வெளியிடப்படுகின்றன.  

இந்நிலையில் தில்லி முன்னணி பேட்ஸ்மேன் ரிஷப் பந்துக்கு தோனியின் மகள் ஹிந்தி உயிரெழுத்துகளைச் சொல்லிக் கொடுக்கும் விடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அ, ஆ... என்று ஸிவா அழகாகச் சொல்ல, ரிஷப் பந்த்தும் அவர் சொன்னதை திருப்பிச் சொல்கிறார். கடைசியில், இரண்டு எழுத்துகளை ரிஷப் பந்த் தவறவிட்டத்தை எடுத்துச் சொல்கிறார் ஸிவா. இதை ரசித்தபடி, தனக்கு அழகாகச் சொல்லிக் கொடுத்த ஸிவாவுக்கு நன்றி சொல்கிறார் பந்த். இந்த விடியோ சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.