ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

தில்லி வெற்றி: பிளே ஆஃப் சுற்றுக்கு பெங்களூருவும் தகுதி!

​ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குவாலிபையர் 1 ஆட்டத்துக்குத் தகுதி பெற்றது.

News image
Updated On :2 நவம்பர் 2020, 5:30 pm

DIN


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குவாலிபையர் 1 ஆட்டத்துக்குத் தகுதி பெற்றது.

13-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (திங்கள்கிழமை) ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. டாஸ் வென்ற தில்லி கேப்டன் ஷ்ரேயஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி, முதலில் பேட் செய்த பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது.

தில்லி தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். பிரித்வி ஷா 9 ரன்களுக்கு முகமது சிராஜ் பந்தில் போல்டானார். இதன்பிறகு, தவானுடன் அஜின்க்யா ரஹானே இணைந்தார். இந்த இணை சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்து விளையாடியது. தவான் துரிதமாக விளையாடி பவுண்டரிகள் அடிக்க, ரஹானே ஒத்துழைப்பு தந்தார். இதனால் பவர் பிளே முடிவில் தில்லி அணி 1 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் சேர்த்தது.

இந்த பாட்னர்ஷிப் நீடிக்க 10 ஓவர்களில் தில்லி அணி 1 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடி வந்த தவான் இந்த சீசனில் மற்றுமொரு அரைசதத்தை எட்டினார். ஆனால், அரைசதம் அடித்தவுடன் 54 ரன்களுக்கு ஷபாஸ் அகமது பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, ரஹானேவும் அரைசதத்தை எட்டினார்.

வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் கட்டுப்பாட்டில் இருந்தபோதும், சிக்ஸர் அடிக்க முயன்ற ஷ்ரேயஸ் ஷபாஸ் பந்தில் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே ரஹானேவும் 60 ரன்களுக்கு வாஷிங்டன் சுந்தர் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு, ரிஷப் பந்த் மற்றும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் 19-வது ஓவர் முடிவில் தில்லி வெற்றியை உறுதி செய்தனர்.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன்மூலம், தில்லி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. தோல்வியடைந்தபோதிலும் பெங்களூரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.