ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

பிளே ஆஃப்: இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு, தில்லி செய்ய வேண்டியது என்ன?

​பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, தில்லி கேபிடல்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸைவிட கூடுதலான நெட் ரன் ரேட்டைப் பெறுவதற்குத் தேவையான புள்ளி விவர தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image
Updated On :2 நவம்பர் 2020, 4:41 pm

DIN


பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, தில்லி கேபிடல்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸைவிட கூடுதலான நெட் ரன் ரேட்டைப் பெறுவதற்குத் தேவையான புள்ளி விவர தகவல்கள் வெளியாகியுள்ளன.

13-வது ஐபிஎல் சீசனின் 55-வது லீக் ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும். தோல்வியடையும் அணி ஹைதராபாத் ஆட்டத்தின் முடிவுக்குக் காத்திருக்க வேண்டும்.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூரு 152 ரன்கள் எடுத்துள்ளது.

பெங்களூரு செய்ய வேண்டியது:

இந்த ஆட்டத்தில் தில்லி வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும் 17.3 ஓவர்கள் பேட் செய்வதை பெங்களூரு உறுதி செய்ய வேண்டும். இதைச் செய்தால்தான் தோற்றாலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸைவிட கூடுதலான நெட் ரன் ரேட்டை பெங்களூரு பெற முடியும்.

ஒருவேளை தில்லி அணி 17.2 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தால், மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தோல்வியடைய வேண்டும். ஹைதராபாத் தோல்வியடைந்தாலே பெங்களூரு பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியும்.

தில்லி செய்ய வேண்டியது:

இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி 18 ரன்கள் அல்லது குறைவான ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும். இதைச் செய்தால்தான் தோற்றாலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸைவிட கூடுதலான நெட் ரன் ரேட்டை தில்லி பெற முடியும்.

ஒருவேளை 19 அல்லது அதற்கு மேலான ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி பெற்றால், மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தோல்வியடைய வேண்டும். ஹைதராபாத் தோல்வியடைந்தாலே தில்லி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியும்.

அதனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த ஆட்டத்தை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கும். மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் வெற்றி பெற்றால் மட்டும் போதுமானது. நெட் ரன் ரேட் பிரச்னை இல்லாமல் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.