ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

தலைக்கவசம் அணிவதைக் கட்டாயம் ஆக்குங்கள்: ஐசிசிக்கு சச்சின் கோரிக்கை

கிரிக்கெட் போட்டிகளில் அனைத்து பேட்ஸ்மேன்களும் கட்டாயமாகத் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று

News image
Updated On :3 நவம்பர் 2020, 11:58 am

DIN

கிரிக்கெட் போட்டிகளில் அனைத்து பேட்ஸ்மேன்களும் கட்டாயமாகத் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் கோரிக்கை வைத்துள்ளார்.

அக்டோபர் 24 அன்று ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் - ஹைதராபாத் அணிகள் மோதின. ரன் எடுக்கும்போது நிகோலஸ் பூரன் வீசிய த்ரோ, ஹைதராபாத் வீரர் விஜய் சங்கர் தலைக்கவசத்தில் பட்டது. தலைக்கவசம் அணிந்திருக்கா விட்டால் விஜய் சங்கருக்குப் பெரிய காயம் ஏற்பட்டிருக்கும். இதுபற்றி சச்சின் ட்வீட் செய்துள்ளதாவது:

கிரிக்கெட் ஆட்டம் வேகமாகியுள்ளது. ஆனால், பாதுகாப்பாக உள்ளதா? சமீபத்தில் ஒரு சம்பவத்தைப் பார்த்தோம். அது மோசமானதாக ஆகியிருக்கலாம். தொழில்முறை போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர், சுழற்பந்து வீச்சாளர் என யார் பந்து வீசினாலும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்துக்கு ஐசிசி முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.