ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

டி20 கிரிக்கெட்டின் பிராட்மேன்: 1000 சிக்ஸர்கள் அடித்த கிறிஸ் கெயிலைப் பாராட்டும் சேவாக்

டி20 கிரிக்கெட்டின் பிராட்மேன் என பஞ்சாப் அணி வீரர் கிறிஸ் கெயிலை இந்திய முன்னாள் வீரர் சேவாக் பாராட்டியுள்ளார்.

News image
Updated On :31 அக்டோபர் 2020, 7:40 am

DIN

டி20 கிரிக்கெட்டின் பிராட்மேன் என பஞ்சாப் அணி வீரர் கிறிஸ் கெயிலை இந்திய முன்னாள் வீரர் சேவாக் பாராட்டியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 50-ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை வீழ்த்தியது.

முன்னதாக முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. 63 பந்துகளில் 8 சிக்ஸா், 6 பவுண்டரிகளுடன் 99 ரன்கள் குவித்தாா் கெயில். பின்னா் ஆடிய ராஜஸ்தான் 17.3 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. பென் ஸ்டோக்ஸ் 26 பந்துகளில் 3 சிக்ஸா், 6 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்தாா். மற்றொரு தொடக்க வீரரான ராபின் உத்தப்பா 23 பந்துகளில் 2 சிக்ஸா், ஒரு பவுண்டரியுடன் 30, சஞ்சு சாம்சன் 25 பந்துகளில் 3 சிக்ஸா், 4 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்க, அந்த அணியின் வெற்றி எளிதானது. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 20 பந்துகளில் 31, ஜோஸ் பட்லா் 11 பந்துகளில் 22 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

இந்த ஆட்டத்தின் மூலம் டி20 கிரிக்கெட்டில் 1000 சிக்ஸர்கள் அடித்த முதல் முதல் வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் கிறிஸ் கெயில். தனது 409-வது டி20 ஆட்டத்தில் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதையடுத்து இந்திய முன்னாள் வீரர் சேவாக், கெயிலைப் பாராட்டி ட்வீட் வெளியிட்டதாவது:

டி20 கிரிக்கெட்டின் பிராட்மேன் - கிறிஸ் கெயில். சந்தேகமே இல்லாமல் அவர் ஒரு மகத்தான வீரர் எனப் பாராட்டியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.