கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

மறக்க முடியாத சீசனாக இருக்கும்: கே.எல்.ராகுல்

பதிமூன்றாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி இந்த சீசனை மறக்க முடியாத சீசனாக்க விரும்புவதாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:23 pm

DIN


துபை: பதிமூன்றாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி இந்த சீசனை மறக்க முடியாத சீசனாக்க விரும்புவதாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் அணி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சனிக்கிழமை சந்தித்த கே.எல்.ராகுல் மேலும் கூறியதாவது:

எங்கள் அணி சிறப்பான அணியாக உள்ளது.

 நாங்கள் இந்த முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த சீசனை மறக்க முடியாத சீசனாக்க விரும்புகிறோம். வீரர்கள் அனைவரும் மிகுந்த நம்பிக்கையோடும், உத்வேகத்தோடும் இருக்கிறோம். இந்த சீசனில் விளையாடுவதில் மிகுந்த உற்சாகமாகவும் இருக்கிறோம்.

இந்த சீசன் எங்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் விளையாடுவது சவாலானதுதான். 

எனினும் எங்களுக்கு ஆதரவளிக்கும் ரசிகர்களுக்காக நாங்கள் சிறப்பாக விளையாடுவோம். எங்கள் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் அனைவருமே கடினமான உழைப்பாளிகள். எங்கள் அணி இளமை, அனுபவம் என சமபலம் வாய்ந்த வீரர்களைக் கொண்ட அணியாக உள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.