ராகுலையும், கெயிலையும் ஆர்சிபி-க்கு வரவேற்ற சஹால்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஜெர்சியைப்போல் பஞ்சாப் கிங்ஸ் ஜெர்சியும் இருப்பதைக் கேலி செய்யும் விதமாக கேஎல் ராகுல், கிறிஸ் கெயிலை பெங்களூரு அணிக்கு வரவேற்று யுஸ்வேந்திர சஹால் டிவீட் செய்துள்ளார்.


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஜெர்சியைப்போல் பஞ்சாப் கிங்ஸ் ஜெர்சியும் இருப்பதைக் கேலி செய்யும் விதமாக கேஎல் ராகுல், கிறிஸ் கெயிலை பெங்களூரு அணிக்கு வரவேற்று யுஸ்வேந்திர சஹால் டிவீட் செய்துள்ளார்.
14-வது ஐபிஎல் சீசனின் நேற்றைய (திங்கள்கிழமை) ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் பஞ்சாப் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.
கடந்த சீசன் வரை கிங்ஸ் லெவன் பஞ்சாபாக இருந்த அணி, நடப்பு சீசனிலிருந்து பஞ்சாப் கிங்ஸ் எனப் பெயர் மாற்றிக்கொண்டது. மேலும் நேற்றைய ஆட்டத்தில் புதிய ஜெர்சியுடன் களமிறங்கியது. இது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஜெர்சியைப் போலவே தோற்றமளிப்பதாக ரசிகர்கள் கூறிவந்தனர்.
இந்த நிலையில், பெங்களூரு வீரர் யுஸ்வேந்திர சஹாலும் இதைக் கேலி செய்யும் விதமாக, ஆர்சிபி-க்கு உங்களை வரவேற்கிறேன் என ராகுல் மற்றும் கெயிலைக் குறிப்பிட்டு டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சஹாலின் இந்த ட்வீட்டுக்கு சமூக ஊடகங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
ராகுலும், கெயிலும் முன்னதாக பெங்களூரு அணிக்காக விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...