இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் அணி தடுமாற்றம்

பஞ்சாப் அணி முதல் 10 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்துள்ளது.

News image
மயங்க் அகர்வால்
Updated On :21 ஏப்ரல் 2021, 10:55 am

DIN

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதல் 10 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்துள்ளது.

சென்னையில் இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. அந்த அணியில் மூன்று மாற்றங்கள். ஃபெபியன் ஆலன், மோசஸ் ஹென்ரிகஸ், எம். அஸ்வின் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளார்கள். சன்ரைசர்ஸ் அணியில் கேன் வில்லியம்சன், கெதர் ஜாதவ் இடம்பெற்றுள்ளார்கள். சிஎஸ்கே அணியில் விளையாடி வந்த கெதர் ஜாதவ், முதல்முறையாக சன்ரைசர்ஸ் அணியில் விளையாடுகிறார். மணிஷ் பாண்டேவுக்குப் பதிலாக சித்தார்த் கெளல் இடம்பெற்றுள்ளார்.  

சென்னை ஆடுகளம் பந்துவீச்சுக்குச் சாதகமானது என்பதால் பஞ்சாப் அணி தடுமாறி வருகிறது. கே.எல். ராகுல் 4 ரன்களில் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 22 ரன்கள் எடுத்த மயங்க் அகர்வால், கலீல் அஹமது பந்துவீச்சில் ஆட்டமிழக்க, வந்த வேகத்தில் ரன் எதுவும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார் நிகோலஸ் பூரன். நிதானமாக விளையாடிய கெயில், 17 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ரஷித் கான் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். 

தடுமாற்றத்துடன் விளையாடி வரும் பஞ்சாப் அணி, 10 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்துள்ளது. தீபக் ஹூடா 9, மோசஸ் ஹென்ரிக்ஸ் 3 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.