ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஐபிஎல்: ரோஹித் சர்மாவுக்கு அபராதம்!

இந்த ஆட்டத்தில் பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதற்காக மும்பை கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு...

News image
Updated On :21 ஏப்ரல் 2021, 6:42 am

DIN

மும்பை கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் நேற்று நடைபெற்ற மும்பை - தில்லி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய தில்லி 19.1 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் அடித்து வென்றது. 4 விக்கெட்டுகள் வீழ்த்திய மிஸ்ரா, ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியினால் சென்னை அணியைப் பின்னுக்குத் தள்ளி புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது தில்லி அணி. ஆர்சிபி அணி முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதற்காக மும்பை கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.