தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஐபிஎல் போட்டியிலிருந்து அஸ்வின், இரு ஆஸி. வீரர்கள் விலகல்!

ஐபிஎல் போட்டியிலிருந்து இந்திய வீரர் அஸ்வினும் ஆஸி. வீரர்களான ஆடம் ஸாம்பா, கேன் ரிச்சர்ட்சன் ஆகியோரும் விலகியுள்ளார்கள்.

News image
Updated On :26 ஏப்ரல் 2021, 8:00 am

DIN

ஐபிஎல் போட்டியிலிருந்து இந்திய வீரர் அஸ்வினும் ஆஸி. வீரர்களான ஆடம் ஸாம்பா, கேன் ரிச்சர்ட்சன் ஆகியோரும் விலகியுள்ளார்கள்.

இந்தியாவில் ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில் சென்னையும் தில்லியும் தலா 8 புள்ளிகளுடன் முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளன. பெங்களூர் அணி 3-ம் இடத்துக்கு இறங்கியுள்ளது.

இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து விளையாட வீரர்களிடையே தயக்கம் நிலவி வருகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின், தில்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவர் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார். ட்விட்டரில் அஸ்வின் கூறியதாவது:

ஐபிஎல் போட்டியிலிருந்து தற்காலிகமாக விலகுகிறேன். என்னுடைய குடும்பத்தினர் கரோனாவுக்கு எதிராகப் போராடி வருகிறார்கள். இந்தக் கடினமான சூழலில் அவர்களுக்கு ஆதரவாக இருக்க விரும்புகிறேன். சரியான திசையில் எல்லாம் செல்லும்போது மீண்டும் விளையாடுவேன் என எதிர்பார்க்கிறேன். தில்லி கேபிடல்ஸ் அணிக்கு நன்றி என்றார்.

இதேபோல ஆர்சிபி அணியில் இடம்பெற்றுள்ள இரு ஆஸி வீரர்களான கேன் ரிச்சர்ட்சனும் ஆடம் ஸாம்பாவும் தனிப்பட்ட காரணங்களுக்காக நாடு திரும்ப முடிவெடுத்துள்ளார்கள். இதனால் இருவரும் ஐபிஎல் போட்டியில் இடம்பெற மாட்டார்கள் என ஆர்சிபி அறிவித்துள்ளது. இவர்களுக்கு முன்பு ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த மற்றொரு ஆஸி. வீரர் ஆண்ட்ரூ டை, நாடு திரும்பினார். கடந்த வாரம் ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த இங்கிலாந்து வீரரான லியம் லிவிங்ஸ்டன், கரோனா பாதுகாப்பு வளையத்தால் ஏற்பட்ட சோர்வு காரணமாக சொந்த நாட்டுக்குத் திரும்பினார். 

கடந்த ஒரு வார இடைவெளியில் ஏராளமான வீரர்கள் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்கள். இதனால் ஐபிஎல் நிர்வாகத்துக்குப் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.