ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

கிரிக்கெட் வீரர் அஸ்வின் குடும்பத்தில் 10 பேருக்கு கரோனா பாதிப்பு!

இதுபற்றிய தகவலை அஸ்வினின் மனைவி ப்ரீத்தி, ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :1 மே 2021, 11:50 am

DIN

கிரிக்கெட் வீரர் அஸ்வின் குடும்பத்தில் 10 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

தில்லி கேபிடல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள அஸ்வின், இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து திடீரென பாதியில் விலகினார். குடும்பத்தினர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்குத் துணையாக இருப்பதற்காக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுகிறேன். வாய்ப்பிருந்தால் மீண்டும் விளையாட வருகிறேன் என்றார்.

இந்நிலையில் அஸ்வின் குடும்பத்தில் 10 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுபற்றிய தகவலை அஸ்வினின் மனைவி ப்ரீத்தி, ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

ஒரே வாரத்தில் 6 பெரியவர்களும் 4 குழந்தைகளும் கரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். வெவ்வேறு வீடு, மருத்துவமனைகளில் அனைவரும் சிகிச்சை பெறுகிறார்கள். கரோனாவால் பாதிப்படைந்தால் உடல்நலம் விரைவாக குணமாகிறது, ஆனால் மனநலம் மிகவும் பாதிப்படைகிறது. 5 - 8வது நாள்கள் எனக்கு மிகவும் மோசமாக இருந்தன. எல்லோரும் உதவிக்கு இருந்தாலும் யாரும் இல்லாததுபோல் இருக்கும். நம்மைத் தனிமைப்படுத்தும் நோய் இது. அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.