தில்லி சிறப்பான பந்துவீச்சு: மும்பை அணி 10 ஓவர்களில் 66/2
அஸ்வினின் 2-வது ஓவரில் இரு பவுண்டரிகள் அடித்தார் சூர்யகுமார்.


தில்லி அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை அணி 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் லீக் சுற்று விரைவில் முடியப் போகிறது. இந்தத் தருணத்தில் மிக முக்கியமான ஆட்டத்தில் தில்லியும் மும்பையும் இன்று மோதுகின்றன.
ஐபிஎல் 2021 போட்டியில் மும்பை அணி மீதமுள்ள 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுவிட்டால் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுவிடலாம். தில்லி அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இரு இடங்களில் ஒன்றைப் பிடிக்க முனைப்புடன் உள்ளது. புள்ளிகள் பட்டியலில் மும்பை அணி 10 புள்ளிகளுடன் 6-ம் இடத்திலும் தில்லி அணி 16 புள்ளிகளுடன் 2-ம் இடத்திலும் உள்ளன. கடந்த இரு ஐபிஎல் போட்டிகளிலும் மும்பைக்கு எதிராக விளையாடிய 5 ஆட்டங்களில் 4-ல் தில்லி அணி தோல்வியடைந்துள்ளது.
ஷார்ஜாவில் நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற தில்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. தில்லி அணியில் லலித் யாதவுக்குப் பதிலாக பிருத்வி ஷா இடம்பெற்றுள்ளார். மும்பை அணியில் ராகுல் சஹாருக்குப் பதிலாக ஜெயந்த் யாதவ் இடம்பெற்றுள்ளார்.
ஐபிஎல் 2021 போட்டியில் சிறப்பாகப் பந்துவீசி வரும் அவேஷ் கான், மும்பை கேப்டன் ரோஹித் சர்மாவை 7 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் அஸ்வின் பந்தில் ஒரு சிக்ஸர் அடித்தார். 6 ஓவர்களில் மும்பை அணி 1 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்தது.
7-வது ஓவரில் டி காக்கின் விக்கெட்டை 19 ரன்களில் வீழ்த்தினார் அக்ஷர் படேல். அஸ்வினின் 2-வது ஓவரில் இரு பவுண்டரிகள் அடித்தார் சூர்யகுமார்.
மும்பை அணி 10-வது ஓவரின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்துள்ளது. சூர்யகுமார் 32, செளரப் திவாரி 7 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...