பிராவோ - சாம் கரண்: சிஎஸ்கே அணியில் நிலவும் போட்டி மனப்பான்மை பற்றி பயிற்சியாளர் பிளெமிங்

சாம் கரணுடன் போட்டியிட்டு பிராவோ சிறப்பாக விளையாடி வருவதாக சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங் கூறியுள்ளார்.
பிராவோ - சாம் கரண்: சிஎஸ்கே அணியில் நிலவும் போட்டி மனப்பான்மை பற்றி பயிற்சியாளர் பிளெமிங்

சாம் கரணுடன் போட்டியிட்டு பிராவோ சிறப்பாக விளையாடி வருவதாக சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங் கூறியுள்ளார்.

ஷார்ஜாவில் நடைபெற்ற சென்னை - ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் விளையாடிய ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. சஹா 44 ரன்கள் எடுத்தார். ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளும் பிராவோ 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். பிறகு விளையாடிய சிஎஸ்கே, 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதோடு 18 புள்ளிகளுடன் பிளேஆஃப்புக்கும் தகுதி பெற்றது. கடந்த வருடம் முதல்முறையாக பிளேஆஃப்புக்குத் தகுதி பெறாததால் சென்னை ரசிகர்கள் ஏமாற்றமடைந்தார்கள். இம்முறை முதல் அணியாக பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்று ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் 2021 போட்டியில் சிறப்பாகப் பந்துவீசி வரும் பிராவோ பற்றி சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங் கூறியதாவது:

முதல் பகுதியில் சாம் கரண் நன்கு விளையாடினார். பிராவோ மீண்டும் விளையாட வந்துவிட்டார். ஆல்ரவுண்டர் இடத்துக்காக ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது. அதுதான் உங்களுக்குத் தேவை. இரு திறமையான வீரர்கள் ஓர் இடத்துக்குப் போட்டியிட்டு, தங்கள் முழுத்திறமையை வெளிப்படுத்துகிறார்கள். இருவருமே அணியில் விளையாடும் வாய்ப்பும் இனி உருவாகலாம். சவாலுக்குத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ள பிராவோ எங்களை மிகவும் ஈர்த்துள்ளார். அவர் மீண்டும் சிறப்பாக விளையாட ஆரம்பித்துவிட்டார். கடைசி ஓவர்களில் அற்புதமாகப் பந்துவீசுகிறார். இதனால் பந்துவீச்சுக் குழுவில் ஒவ்வொருவருக்கும் தெளிவான பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com