தில்லிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை முதலில் பேட்டிங்: இரு அணிகளிலும் முக்கிய மாற்றங்கள்

தில்லி அணியில் லலித் யாதவுக்குப் பதிலாக பிருத்வி ஷா இடம்பெற்றுள்ளார்.
மும்பை அணி (கோப்புப் படம்)
மும்பை அணி (கோப்புப் படம்)

ஐபிஎல் லீக் சுற்று விரைவில் முடியப் போகிறது. இந்தத் தருணத்தில் மிக முக்கியமான ஆட்டத்தில் தில்லியும் மும்பையும் இன்று மோதுகின்றன. 

ஐபிஎல் 2021 போட்டியில் மும்பை அணி மீதமுள்ள 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுவிட்டால் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுவிடலாம். தில்லி அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இரு இடங்களில் ஒன்றைப் பிடிக்க முனைப்புடன் உள்ளது. புள்ளிகள் பட்டியலில் மும்பை அணி 10 புள்ளிகளுடன் 6-ம் இடத்திலும் தில்லி அணி 16 புள்ளிகளுடன் 2-ம் இடத்திலும் உள்ளன. கடந்த இரு ஐபிஎல் போட்டிகளிலும் மும்பைக்கு எதிராக விளையாடிய 5 ஆட்டங்களில் 4-ல் தில்லி அணி தோல்வியடைந்துள்ளது. 

ஷார்ஜாவில் நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற தில்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. தில்லி அணியில் லலித் யாதவுக்குப் பதிலாக பிருத்வி ஷா இடம்பெற்றுள்ளார். மும்பை அணியில் ராகுல் சஹாருக்குப் பதிலாக ஜெயந்த் யாதவ் இடம்பெற்றுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com