பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சிஎஸ்கே வரலாற்றில் ருதுராஜ் - டு பிளெஸ்சிஸ் கூட்டணி புதிய சாதனை

அதிக ரன்கள் எடுத்த சிஎஸ்கே கூட்டணி என்கிற பெருமையைப் பெற்றுள்ளது.

News image
ருதுராஜ் & டு பிளெஸ்சிஸ்
Updated On :2 அக்டோபர் 2021, 9:13 am

DIN

ஐபிஎல் 2021 போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றிநடை போடுவதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறார்கள் தொடக்க வீரர்களான ருதுராஜ் கெயிக்வாட்டும் டு பிளெஸ்சிஸும். 

அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் இருவரும் தலா 400 ரன்களுக்கு மேல் எடுத்து 4 ( டு பிளெஸ்சிஸ்) மற்றும் 5-ம் (ருதுராஜ்) இடங்களைப் பிடித்துள்ளார்கள். 

ஐபிஎல் 2021 போட்டியில் ருதுராஜ் இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி 3 அரை சதங்களுடன் 407 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 134.76.

டு பிளெஸ்சிஸ் இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி 4 அரை சதங்களுடன் 435 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 138.09.

இந்நிலையில் இந்த ஜோடி புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது. இந்த வருடம் மேலும் பல ஆட்டங்களில் விளையாடவுள்ள நிலையில் அதற்குள் அதிக ரன்கள் எடுத்த சிஎஸ்கே கூட்டணி என்கிற பெருமையைப் பெற்றுள்ளது.

2013-ல் மைக் ஹஸ்ஸியும் ரெய்னாவும் 587 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த சிஎஸ்கே கூட்டணி என்கிற சாதனையைப் படைத்தார்கள். 2020 வரை அவர்களுடைய சாதனை முறியடிக்க முடியாமல் இருந்தது. ஆனால் இந்தமுறை 11 ஆட்டங்களிலேயே ஹஸ்ஸி - ரெய்னா சாதனையைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார்கள் ருதுராஜும் டு பிளெஸ்சிஸும். இருவரும் ஐபிஎல் 2021 போட்டியில் இதுவரை 11 ஆட்டங்களில் 599 ரன்கள் எடுத்துள்ளார்கள். இவர்களிருவரும் குறைந்தது 3 அல்லது 4 ஆட்டங்களிலாவது விளையாடுவார்கள் என்பதால் எப்படியும் 700 ரன்களைக் கடந்துவிடுவார்கள் என எதிர்பார்க்கலாம். 

ஐபிஎல்: ஒரு வருடத்தில் அதிக ரன்கள் எடுத்த சிஎஸ்கே கூட்டணி

ருதுராஜ் & டு பிளெஸ்சிஸ் - 599 ரன்கள் (2021)
மைக் ஹஸ்ஸி & ரெய்னா - 587 ரன்கள் (2013)
மைக் ஹஸ்ஸி & முரளி விஜய் - 540 ரன்கள் (2013)
மெக்கல்லம் - டுவைன் ஸ்மித் - 513 ரன்கள் (2014)
மைக் ஹஸ்ஸி - முரளி விஜய் - 481 ரன்கள் (2011)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.