ஐபிஎல்: பஞ்சாப் அணியைக் காப்பாற்றிய தமிழக வீரர் ஷாருக் கான்

9 பந்துகள் மட்டும் எதிர்கொண்டு 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 22 ரன்கள் எடுத்தார். ..
ஷாருக் கான் (கோப்புப் படம்)
ஷாருக் கான் (கோப்புப் படம்)

ஐபிஎல் 2021 போட்டி இந்தியாவில் நடைபெற்றபோது பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஷாருக் கான் 8 ஆட்டங்களில் விளையாடினார்.

எனினும் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 2021 தொடங்கியபோது ஷாருக் கானுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. பல தோல்விகளுக்குப் பிறகு இதன் பாதிப்பை உணர்ந்த பஞ்சாப் அணி, கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் அவரை மீண்டும் சேர்த்துக்கொண்டது.

ஷாருக் கானை அணியிலிருந்து நீக்கியது எவ்வளவு பெரிய தவறு என்பது ஒரே ஆட்டத்தில் நிரூபிக்கப்பட்டுவிட்டது. வழக்கம்போல இலக்கை விரட்ட பஞ்சாப் அணி நேற்றும் தடுமாறியபோது 17-வது ஓவரில் களமிறங்கிய ஷாருக் கான், கடகடவென சிக்ஸர்களும் பவுண்டரியும் அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார். 9 பந்துகள் மட்டும் எதிர்கொண்டு 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 22 ரன்கள் எடுத்தார். 

வெற்றி குறித்து பஞ்சாப் கேப்டன் ராகுல் கூறியதாவது:

பேட்டிங் பயிற்சியாளர்களிடம் நன்கு பயிற்சி எடுத்துக்கொண்டு அவர்களிடம் நிறைய கேள்விகள் கேட்டு, தன்னுடைய ஆட்டத்தை ஷாருக் கான் மேம்படுத்திக் கொண்டார். அவரால் 17-, 180 ஸ்டிரைக் ரேட்டுகளைச் சுலபமாக எடுக்க முடியும். அவரால் பெரிய சிக்ஸர்களை அடிக்க முடியும். தமிழ்நாடு அணிக்காக பலமுறை அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்றார்.

அதிரடியாக விளையாடி பஞ்சாப் அணிக்கு வெற்றி தேடித் தந்த ஷாருக் கான் கூறியதாவது:

முதலில் இருந்து விளையாடி வந்த ராகுல் அப்போது களத்தில் இருந்தது எனக்கு வசதியாக இருந்தது. இதனால் முதல் பந்திலிருந்து அதிரடியாக விளையாட முடிந்தது. கடைசியாக அடித்த ஷாட் நீண்ட தூரம் செல்லும் நினைத்தேன். அந்த வாய்ப்பைத் துணிச்சலுடன் மேற்கொண்டேன். இதுபோன்ற சூழல்களில் இடவெளிகளில் ரன்கள் எடுக்கப் பார்ப்பேன். எங்களுக்குத் தொடர்ச்சியாக மூன்று வெற்றிகள் தேவை. ஒரு வெற்றியுடன் தொடங்கியுள்ளோம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com