குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஐபிஎல் ஏலத்தில் கோடிகளை அள்ளுவார் வெங்கடேஷ் ஐயர்: சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கணிப்பு

கொல்கத்தா அணியில் விளையாடி வரும் தமிழரான வெங்கடேஷ் ஐயர்...

News image
Updated On :2 அக்டோபர் 2021, 7:29 am

DIN

கொல்கத்தா அணியில் விளையாடி வரும் தமிழரான வெங்கடேஷ் ஐயர், ஐபிஎல் 2022 ஏலத்தில் ரூ. 12 முதல் ரூ. 14 கோடி வரை அள்ளுவார் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.

ஐபிஎல் போட்டியின் புதிய நட்சத்திரமான வெங்கடேஷ் ஐயர், கொல்கத்தா அணி வீரராக அசத்தி வருகிறார். இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களில் இரு அரை சதங்களுடன் 193 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 141.91. இதுவரை 7.3 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். எகானமி - 8.53. இதனால் ஐபிஎல் போட்டியின் புதிய நட்சத்திரம், புதிய ஆல்ரவுண்டராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

இந்தூரில் வசிக்கும் 26 வயது வெங்கடேஷ் ஐயர், தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர். 

இந்நிலையில் ஐபிஎல் 2022 போட்டிக்காக நடைபெறும் மெகா ஏலத்தில் வெங்கடேஷ் ஐயருக்கு ரூ. 14 கோடி வரை கிடைக்க வாய்ப்புள்ளது என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். கிரிக்இன்ஃபோ இணையத்தளத்தில் அவர் கூறியதாவது:

ஐபிஎல் 2022 ஏலத்தில் ரூ. 12 கோடி முதல் ரூ. 14 கோடி வரை வெங்கடேஷ் ஐயருக்குக் கிடைக்கும். அவருடைய பங்களிப்பு, அதிர்ஷ்டத்தால் வந்தது அல்ல. அவருடைய முதல் தர ஆட்டம் மற்றும் லிஸ்ட் ஏ சாதனைகளும் அபாரமாக உள்ளன. உள்ளூர் கிரிக்கெட்டிலும் அதிக ரன்களை அதிக ஸ்டிரைக் ரேட்டில் எடுத்துள்ளார். நன்கு பேட்டிங் செய்யத் தெரிந்த வீரர் அவர். மேலும் பந்துவீச்சாளரும் கூட. பந்துவீச்சிலும் திறமையை வெளிப்படுத்த முடியும் என்பதைக் கடைசி ஆட்டத்தில் நிரூபித்துள்ளார். எனவே ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு அவர் தேர்வு செய்யப்படுவார் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.