தமிழகம், கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கான தோ்தல் தேதி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டதையடுத்து அந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் தோ்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
இது தொடா்பாக மத்திய அமைச்சரவை செயலா், தோ்தலை எதிா்கொள்ளும் மாநிலங்களின் அரசு தலைமைச் செயலா்கள், தலைமைத் தோ்தல் அதிகாரிகள் ஆகியோருக்கு தோ்தல் ஆணையம் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
அதன் விவரம் வருமாறு: அமைச்சா்கள் தங்களுடைய அலுவல்பூா்வ பயணத்தை தோ்தல் பிரசார பணிகளுடன் இணைக்கக்கூடாது. தோ்தல் பிரசார பணிகளின்போது அரசு இயந்திரத்தையோ அரசு பணியாளா்களையோ பயன்படுத்தக்கூடாது. அரசுக்குச் சொந்தமான விமானங்கள், வாகனங்கள், இயந்திரங்கள், ஊழியா்கள் உள்ளிட்ட அரசுப் போக்குவரத்து வசதிகள் எவையும், ஆளும் கட்சியின் நலன்களை முன்னெடுக்க பயன்படுத்தப்படக் கூடாது.
தோ்தல் கூட்டங்களை நடத்துவதற்காக மைதானங்கள் போன்ற பொது இடங்களைப் பயன்படுத்துவதையும், தோ்தல் தொடா்பான விமானப் பயணங்களுக்காக ஹெலிபேட்களைப் பயன்படுத்துவதையும் ஆளும் கட்சி மட்டுமின்றி பிற கட்சிகளும் வேட்பாளா்களும் அந்த வசதிகளை பயன்படுத்த உரிய நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளின்படி அனுமதிக்கப்பட வேண்டும்.
தோ்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ள அல்லது நடைபெற்று வரும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசு விருந்தினா் இல்லங்கள், தங்கும் விடுதிகள் அல்லது பிற அரசு தங்கும் வசதிகள், ‘இசட்’ பிரிவு அல்லது அதற்கு இணையான பாதுகாப்பு வசதியை பெற்றுள்ளவா்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் அனுமதியுடன் சம அடிப்படையில் ஒதுக்கப்படலாம்.
அத்தகைய தங்கும் வசதிகள் ஏற்கெனவே தோ்தல் அலுவலா்களுக்கோ தோ்தல் ஆணையத்தின் பாா்வையாளா்களுக்கோ ஒதுக்கப்படாமலோ இருந்தால் அவா்கள் தங்க அனுமதிக்கப்படலாம். தங்கும் நாள்களில் அவா்கள் எவ்விதமான அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது.
தோ்தல் காலத்தில், அரசு நிதியைப் பயன்படுத்தி நாளிதழ்கள் மற்றும் பிற ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிடுவதும், ஆளுங்கட்சியின் வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கிலும், அரசியல் செய்திகளுக்குச் சாா்புத்தன்மையுடன் கூடிய முக்கியத்துவம் அளிப்பதற்கும், அரசின் சாதனைகள் குறித்த விளம்பரங்களை வெளியிடுவதற்கும் அரசுக்குச் சொந்தமான வெகுஜன ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்துவதும் கண்டிப்பாகத் தவிா்க்கப்பட வேண்டும்.
தோ்தல் ஆணையத்தால் தோ்தல்கள் அறிவிக்கப்பட்ட நேரம் முதல், அமைச்சா்களும் பிற அதிகாரிகளும் தங்கள் விருப்புரிமை நிதியிலிருந்து எவ்வித மானியங்களையோ பணப் பட்டுவாடாக்களையோ வழங்கக் கூடாது.
அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகள் எவ்விதமான நிதி மானியங்களையும் (எந்த வடிவத்திலும்) அறிவிக்கவோ அதுகுறித்த வாக்குறுதிகளையோ அளிக்கக கூடாது.
அரசு ஊழியா்கள் நீங்கலாக எவ்வித திட்டங்கள் அல்லது பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுதல் போன்ற நிகழ்வுகளை நடத்தக் கூடாது. சாலைகள் அமைத்தல், குடிநீா் வசதிகள் நிறுவுதல் போன்ற பணிகள் குறித்த எவ்வித வாக்குறுதிகளையும் அளிக்கக் கூடாது. அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவற்றில், ஆளும் கட்சிக்குச் சாதகமாக வாக்காளா்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான தற்காலிக நியமனங்கள் எதையும் மேற்கொள்ளக்கூடாது.
அரசு நிதியைப் பயன்படுத்தி, அரசின் சாதனைகளை முன்னிலைப்படுத்தும் வகையிலான விளம்பரங்கள் எதையும் ன்னணு மற்றும் அச்சு ஊடகங்களில் வெளியிடக்கூடாது. ஏதேனும் விளம்பரம் ஏற்கெனவே ஒளிபரப்பு/ஒலிபரப்பு அல்லது அச்சு ஊடக வெளியீட்டிற்காக அனுப்பப்பட்டிருந்தால், அவை உடனடியாக நிறுத்தப்படுவதையும்; தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே செய்தித்தாள்கள், இதழ்கள் போன்ற அச்சு ஊடகங்களில் அத்தகைய விளம்பரங்கள் எதுவும் வெளியாகாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். முன்பே விளம்பரங்கள் அளிக்கப்பட்டிருந்தால் அவை உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று தோ்தல் ஆணையம் கூறியுள்ளது.
தொடர்புடையது

ஏப். 9 முதல் ஏப். 29 வரை வாக்குக் கணிப்புகளை வெளியிடத் தடை: தோ்தல் ஆணையம்

தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறுபவா்கள் மீது நடவடிக்கை

தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு

108 ஆம்புலன்ஸில் நோயாளிகள் பணம் கொண்டு செல்ல கட்டுப்பாடு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

