ப்ரித்வி ஷா, தவான் அதிரடி: பெங்களூரு அணிக்கு 165 ரன்கள் இலக்கு
By DIN | Published On : 08th October 2021 09:27 PM | Last Updated : 08th October 2021 09:27 PM | அ+அ அ- |

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.
துபையில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 56-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் பலபரீட்சை நடத்துகின்றன. இதில் முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து டெல்லி அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வி ஷா, தவான் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ப்ரித்வி ஷா, 48 ரன்களிலும், தவான் 43 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதையும் படிக்க- முன்னாள் அமைச்சர் சிதம்பரம் உறவினர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள்
பின்னர் வந்த வீரர்களில் யாரும் சொல்லிக்கொள்ளும்படி விளையாடவில்லை. ரிஷப் பந்த் 10, ஷ்ரேயாஸ் ஐயர் 18, ஹெட் மயர் 29 என அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது.