பெங்களூருவில் தொடங்கப்பட்டுள்ள எம்.எஸ். தோனி கிரிக்கெட் அகாதெமி

பிரபல வீரரான எம்.எஸ். தோனி, பெங்களூருவில் கிரிக்கெட் அகாதெமியைத் தொடங்கியுள்ளார்.
பெங்களூருவில் தொடங்கப்பட்டுள்ள எம்.எஸ். தோனி கிரிக்கெட் அகாதெமி

பிரபல வீரரான எம்.எஸ். தோனி, பெங்களூருவில் கிரிக்கெட் அகாதெமியைத் தொடங்கியுள்ளார்.

இந்திய அணிக்காக 90 டெஸ்டுகள், 350 ஒருநாள், 98 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் தோனி. கடந்த வருடம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் ஆமதாபாத்தில் தோனி பெயரில் கிரிக்கெட் அகாதெமி தொடங்கப்பட்டது. இந்நிலையில் அடுத்ததாக பெங்களூருவில் எம்.எஸ். தோனி கிரிக்கெட் அகாதெமி தொடங்கப்பட்டுள்ளது. விளையாட்டு நிறுவனங்களான கேம்பிளே மற்றும் ஆர்கா ஸ்போர்ட்ஸ் ஆகியவை இதன் செயல்பாடுகளை நிர்வகிக்கின்றன. 

எம்.எஸ். தோனி கிரிக்கெட் அகாதெமி ஆலோசகரான தோனி இதுபற்றி கூறியதாவது: எம்.எஸ். தோனி கிரிக்கெட் அகாதெமியைத் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சிறந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன் கிரிக்கெட் பயிற்சிகள் அளிக்கப்படும். தரமான பயிற்சியாளர்கள், உடற்பயிற்சி நிபுணர்கள் பயிற்சியளிப்பார்கள். கிரிக்கெட் தொழில்நுட்பம் மற்றும் இந்த விளையாட்டுக்குத் தேவையான மனநலப் பயிற்சிகளைக் கற்றுக்கொள்ள எம்.எஸ். தோனி கிரிக்கெட் அகாதெமியில் இணையுங்கள் எனக் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com