மைதானத்தில் வெளிப்பட்ட தோனி - கோலி நட்பு: ரசிகர்கள் உற்சாகம்

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டிருப்பதால்...
மைதானத்தில் வெளிப்பட்ட தோனி - கோலி நட்பு: ரசிகர்கள் உற்சாகம்

ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது சென்னை சூப்பா் கிங்ஸ் அணி.

முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. முதல் விக்கெட்டுக்கு விராட் கோலியும் தேவ்தத் படிக்கல்லும் 13.2 ஓவர்களிலேயே 111 ரன்கள் எடுத்தார்கள். இதன்பிறகு வரிசையாக விக்கெட்டுகள் விழுந்ததால் அதிக ரன்கள் எடுக்க முடியாமல் தடுமாறியது ஆர்சிபி. படிக்கல் 70 ரன்களும் கோலி 53 ரன்களும் எடுத்தார்கள். பிராவோ 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

எளிதான இலக்கை சிரமம் இல்லாமல் அடைந்தது சிஎஸ்கே. ருதுராஜும் டு பிளெஸ்சிஸும் முதல் விக்கெட்டுக்கு 8.2 ஓவர்களில் 71 ரன்கள் எடுத்தார்கள். ருதுராஜ் 38 ரன்களும் டு பிளெஸ்சிஸ் 31 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கத்தை அளித்தார்கள். ராயுடு 32 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே 18.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. ஆர்சிபி 3-ம் இடத்தில் உள்ளது. 

இந்நிலையில் நேற்றைய ஆட்டம் சற்று தாமதமாகத் தொடங்கியது. இதனால் கிடைத்த அவகாசத்தில் மைதானத்தில் இருந்த தோனியுடன் உரையாடினார் கோலி. டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டிருப்பதால் அதுபற்றி இருவரும் ஆலோசனை செய்திருப்பார்கள் என்று அறியப்படுகிறது. தோனியுடனான நட்பை வெளிப்படுத்தும் விதமாக கோலி அவரிடம் உரையாடியதும் தோனிக்கு மரியாதை அளித்ததும் சமூகவலைத்தளங்களில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. தோனி - கோலி பேசிக்கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், விடியோக்களைச் சமூகவலைத்தளங்களில் பலரும் பகிர்ந்தார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com