வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

வெற்றிப் பாதைக்குத் திரும்பிய மும்பை: களைகட்டும் புள்ளிகள் பட்டியல்

புள்ளிகள் பட்டியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

News image
Updated On :29 செப்டம்பர் 2021, 10:52 am

ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணியும் தில்லி அணிக்கு எதிராக கொல்கத்தாவும் வெற்றி பெற்றன. இதனால் புள்ளிகள் பட்டியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

அபுதாபியில் நடைபெற்ற மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் மட்டும் எடுத்தது. மார்க்ரம் 42 ரன்கள் எடுத்தார். பும்ரா, பொலார்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். பிறகு பேட்டிங் செய்த மும்பை அணி, 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. செளரப் திவாரி 45 ரன்களும் பாண்டியா ஆட்டமிழக்காமல் 40 ரன்களும் எடுத்தார்கள்.

நேற்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் தில்லியை கேகேஆர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த இரு ஆட்டங்களாலும் புள்ளிகள் பட்டியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மும்பை அணி 5-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தா அணி 4-ம் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. 5-ம் இடத்தில் இருந்த பஞ்சாப் 6-ம் இடத்துக்கும் 6-ம் இடத்தில் இருந்த ராஜஸ்தான் 7-ம் இடத்துக்கும் இறங்கியுள்ளன.

புள்ளிகள் பட்டியல்

 வரிசை  அணிகள் ஆட்டங்கள்  வெற்றி  தோல்வி  புள்ளிகள்  நெட்   ரன்ரேட் 
 1. சென்னை 10 8 2 16 +1.069
 2. தில்லி 11 8 3 16 +0.562
 3. பெங்களூர் 10 6 4 12 -0.359
 4. கொல்கத்தா 11 5 6 10 +0.363
 5. மும்பை 11 5 6 10 -0.453
 6. பஞ்சாப் 11 4 7 8 -0.288
 7. ராஜஸ்தான் 10 4 6 8 -0.369
 8. ஹைதராபாத்  10 2 8 4 -0.501

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.