ஐபிஎல் போட்டியிலிருந்து விலகல்: தீபக் சஹார் ரசிகர்களுக்கு அளித்த தகவல் என்ன?

காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகிய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் தீபக் சஹார், ரசிகர்களுக்கு ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ஐபிஎல் போட்டியிலிருந்து விலகல்: தீபக் சஹார் ரசிகர்களுக்கு அளித்த தகவல் என்ன?

காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகிய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் தீபக் சஹார், ரசிகர்களுக்கு ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதெமியில் காயத்துக்குச் சிகிச்சை பெற்று வரும் சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹாருக்கு முதுகிலும் காயம் ஏற்பட்டதையடுத்து ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

ஐபிஎல் ஏலத்தில் தீபக் சஹாரை ரூ. 14 கோடிக்குத் தேர்வு செய்தது சிஎஸ்கே அணி. கடைசியாக விளையாடிய மூன்று ஒருநாள் ஆட்டங்களில் இரு அரை சதங்களை அடித்து தன் பேட்டிங் திறமையையும் அவர் வெளிப்படுத்தினார். 2018 முதல் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார் தீபக் சஹார். 58 ஆட்டங்களில் 58 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அவற்றில் 42 விக்கெட்டுகளை பவர்பிளே ஓவர்களில் எடுத்துள்ளதால் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரராக உள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் தீபக் சஹாரின் காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சை பெறுவதற்காக பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதெமிக்குச் சென்றார். அங்குக் கடந்த ஒரு மாதமாக அவர் சிகிச்சை பெற்று வருகிறார். எனினும் காயம் முழுவதும் குணமாகி, ஏப்ரல் இறுதியில் சிஎஸ்கே அணியினருடன் மீண்டும் இணைவார் என்று கூறப்பட்டது. 

நேஷனல் கிரிக்கெட் அகாதெமியில் காயத்துக்குச் சிகிச்சை பெற்று வரும் தீபக் சஹாருக்கு முதுகிலும் தற்போது காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஐபிஎல் போட்டியில் இந்த ஆண்டு தீபக் சஹார் பங்கேற்க மாட்டார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இன்ஸ்டகிராம் தளத்தில் தீபக் சஹார் கூறியதாவது:

அனைவரும் என்னை மன்னியுங்கள். காயம் காரணமாக இந்த வருட ஐபிஎல் போட்டியில் என்னால் பங்கேற்க முடியவில்லை. விளையாட வேண்டும் என்று விரும்பினேன். மீண்டும் எப்போதும் போல அதே பலத்துடன் திரும்ப வருவேன். அனைவருடைய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com