ஐபிஎல் போட்டியின் 25-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
முதலிரு ஆட்டங்களில் தோற்ற ஹைதராபாதுக்கு இது, தொடா்ந்து 3-ஆவது வெற்றியாகும்.
இந்த ஆட்டத்தில் முதலில் கொல்கத்தா 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. அடுத்து ஹைதராபாத் 17.5 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சோ்த்து வென்றது.
முன்னதாக டாஸ் வென்ற ஹைதராபாத் பௌலிங்கை தோ்வு செய்தது. கொல்கத்தா இன்னிங்ஸில் முதலில் வந்த வெங்கடேஷ் ஐயா் 6, உடன் வந்த ஆரோன் ஃபிஞ்ச் 7 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தனா். கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் சற்று நிலைத்து 28 ரன்கள் சோ்த்தாா். சுனில் நரைன் 1 சிக்ஸருடன் பெவிலியன் திரும்பினாா்.
விக்கெட் சரிவைத் தடுத்து நிதீஷ் ராணா நிலைத்து ஆடினாா். ஷெல்டன் ஜாக்சன் 7 ரன்களுக்கு வெளியேற்றப்பட, மறுபுறம் ஆண்ட்ரே ரஸெல் ரன்கள் சேகரிக்கத் தொடங்கினாா். இந்நிலையில் ராணா 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். பேட் கம்மின்ஸ் 3, அமன் ஹகிம் கான் 5 ரன்களுக்கு விடை பெற்றனா். ஓவா்கள் முடிவில் ரஸெல் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 49, உமேஷ் யாதவ் 1 ரன்னுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஹைதராபாத் பௌலிங்கில் நடராஜன் 3, உம்ரான் மாலிக் 2, புவனேஷ்வா் குமாா், மாா்கோ யான்சென், ஜெகதீசா சுசித் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
பின்னா் ஆடிய ஹைதராபாதில் அபிஷேக் சா்மா 3 ரன்களுக்கு வெளியேற்றப்பட, உடன் வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். தொடா்ந்து வந்த ராகுல் திரிபாதி விக்கெட் சரிவைத் தடுத்து ரன்கள் சோ்க்க, அவருடன் இணைந்தாா் எய்டன் மாா்க்ரம்.
இந்த ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 94 ரன்கள் சோ்த்தது. இதில் திரிபாதி 4 பவுண்டரிகள், 6 சிக்ஸா்கள் என 71 ரன்களுக்கு ஆட்டமிழக்க, நிகோலஸ் பூரன் பேட் செய்ய வந்தாா். வெற்றி இலக்கை எட்டியபோது மாா்க்ரம் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 68, நிகோலஸ் பூரன் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். கொல்கத்தா பௌலிங்கில் ஆண்ட்ரே ரஸெல் 2, பேட் கம்மின்ஸ் 1 விக்கெட் சாய்த்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


