‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஐபிஎல்: ஹைதராபாத்தில் 3 மாற்றங்கள், டெல்லியில் 4 மாற்றங்கள்

டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பந்தவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

News image

படம்: ட்விட்டர் | ஐபிஎல்

Updated On :5 மே 2022, 2:05 pm

DIN


டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பந்தவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய (வியாழக்கிழமை) ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

ஹைதராபாத் அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக விளையாடவில்லை. மார்கோ யான்செனுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்குப் பதில் கார்த்திக் தியாகி, ஷ்ரேயஸ் கோபால் மற்றும் ஷான் அபாட் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டெல்லி கேபிடல்ஸ் அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பிரித்வி ஷா, அக்சர் படேல், முஸ்தபிஸூர் ரஹ்மான் மற்றும் சேத்தன் சகாரியா ஆகியோருக்குப் பதில் அன்ரிச் நோர்க்கியா, மந்தீப் சிங், ரிபல் படேல் மற்றும் கலீல் அகமது ஆகியோர் விளையாடுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.