ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சன்ரைசர்ஸ் அணியில் புதிய வீரர்

காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் செளரப் துபே விலகியதால் புதிய வீரரை சன்ரைசர்ஸ் அணி தேர்வு செய்துள்ளது.

News image
Updated On :5 மே 2022, 5:41 am

DIN

காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் செளரப் துபே விலகியதால் புதிய வீரரை சன்ரைசர்ஸ் அணி தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் 2022 போட்டியில் சன்ரைசர்ஸ் அணி, 9 ஆட்டங்களில் 5-ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 5-ம் இடத்தில் உள்ளது. 

ஐபிஎல் ஏலத்தில் செளரப் துபே என்கிற வேகப்பந்து வீச்சாளரைத் தேர்வு செய்தது சன்ரைசர்ஸ் அணி. ஆனால் அவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளதால் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து ஜார்கண்ட் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் சுசாந்த் மிஸ்ராவைத் தேர்வு செய்துள்ளது.

2020-ல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற யு-19 உலகக் கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்றவர் சுசாந்த் மிஸ்ரா. 5 ஆட்டங்களில் 7 விக்கெட்டுகள் எடுத்தார். தற்போது ரூ. 20 லட்சத்துக்கு மிஸ்ராவைத் தேர்வு செய்துள்ளது சன்ரைசர்ஸ் அணி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.