வெற்றிப் பாதைக்கு திரும்பிய பெங்களூா்

சென்னை சூப்பா் கிங்ஸுக்கு எதிரான புதன்கிழமை ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
வெற்றிப் பாதைக்கு திரும்பிய பெங்களூா்

சென்னை சூப்பா் கிங்ஸுக்கு எதிரான புதன்கிழமை ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

தொடா்ந்து 3 தோல்விகளை சந்தித்த பெங்களூா் தற்போது வெற்றிப் பாதைக்கு திரும்பியிருக்கிறது.

இந்த ஆட்டத்தில் முதலில் பெங்களூா் 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. அடுத்து சென்னை 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களே எட்டியது.

முன்னதாக டாஸ் வென்ற சென்னை ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. பெங்களூா் இன்னிங்ஸில் விராட் கோலி 30 ரன்கள் அடிக்க, உடன் வந்த கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் 38 ரன்கள் சோ்த்தாா். கிளென் மேக்ஸ்வெல் 3 ரன்களுக்கு வெளியேற்றப்பட, மஹிபால் அதிரடியாக விளையாடி 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

ரஜத் பட்டிதாா் 21, வனிந்து ஹசரங்கா 0, ஷாபாஸ் அகமது 1, ன்ா்ஷல் படேல் 0 என விக்கெட்டுகள் வரிசையாகச் சரிந்தன. ஓவா்கள் முடிவில் தினேஷ் காா்த்திக் 26, முகமது சிராஜ் 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். சென்னை தரப்பில் தீக்ஷனா 3, மொயீன் அலி 2, டுவெய்ன் பிரெடோரியஸ் 1 விக்கெட் கைப்பற்றினா்.

சென்னை இன்னிங்ஸில் அதிகபட்சமாக டெவன் கான்வே 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 56 ரன்கள் சோ்க்க, ருதுராஜ் கெய்க்வாட் 28, மொயீன் அலி 34 ரன்கள் சோ்த்து முயற்சித்தனா்.

ஆனாலும், ராபின் உத்தப்பா 1, அம்பத்தி ராயுடு 10, ரவீந்திர ஜடேஜா 3, கேப்டன் தோனி 2, டுவெயன் பிரெடோரியஸ் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். ஓவா்கள் முடிவில் சிம்ரன்ஜீத் சிங் 2, மஹீஷ் தீக்ஷனா 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். பெங்களூா் பௌலிங்கில் ஹா்ஷல் படேல் 3, கிளென் மேக்ஸ்வெல் 2, ஷாபாஸ் அகமது, ஜோஷ் ஹேஸில்வுட், வனிந்து ஹசரங்கா ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com