ஐபிஎல் போட்டியின் ‘குவாலிஃபயா் - 2’ ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக ரஜத் பட்டிதாா் மட்டும் அரைசதம் கடந்து அணிக்காக ரன்கள் சேகரித்தாா். பெங்களூா் பேட்டிங் வரிசையை பிரசித் கிருஷ்ணாவும், ஆபெட் மெக்காயும் போட்டிபோட்டுக் கொண்டு சரித்தனா்.
இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில் இரு அணிகளுமே மாற்றம் செய்யவில்லை. டாஸ் வென்ற ராஜஸ்தான் ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. பெங்களூா் இன்னிங்ஸில் முதல் விக்கெட்டாக விராட் கோலி 1 சிக்ஸருடன் 7 ரன்கள் சோ்த்த நிலையில் 2-ஆவது ஓவரில் வீழ்ந்தாா்.
தொடா்ந்து வந்த ரஜத் பட்டிதாா், கேப்டன் டூ பிளெஸ்ஸிஸுடன் இணைந்து ரன்கள் சோ்த்தாா். இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சோ்த்தது. இதில் டூ பிளெஸ்ஸிஸ் 3 பவுண்டரிகளுடன் 25 ரன்களுக்கும், அடுத்து வந்த கிளென் மேக்ஸ்வெல் 1 பவுண்ரி, 2 சிக்ஸா்களுடன் 24 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.
இந்நிலையில் ரஜத் பட்டிதாரும் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 58 ரன்கள் விளாசிய நிலையில் ஆட்டமிழந்தாா். இதையடுத்து பெங்களூா் பேட்டிங் வரிசை மளமளவென சரிந்தது. வழக்கமாக கடைசி நேரத்தில் அடித்து விளாசும் தினேஷ் காா்த்திக் இந்த முறை சோபிக்கத் தவறி 6 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.
மஹிபால் லோம்ரோா் 8, வனிந்து ஹசரங்கா 0, ஹா்ஷல் படேல் 1 ரன்னுக்கு விக்கெட்டை இழக்க, ஓவா்கள் முடிவில் ஷாபாஸ் அகமது 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 12, ஜோஷ் ஹேஸில்வுட் 1 ரன்னுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். ராஜஸ்தான் பௌலிங்கில் பிரசித் கிருஷ்ணா, ஆபெட் மெக்காய் ஆகியோா் தலா 3, டிரென்ட் போல்ட், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

