‘என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்’: தினேஷ் கார்த்திக் உருக்கம்

பெங்களுரூ அணியின் ரசிகர்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன் என தினேஷ் கார்த்திக் உருக்கமாக விடியோ வெளியிட்டுள்ளார்.

நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்ததின் மூலம் பெங்களுரூ அணி இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. இது அந்த அணியின் ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது. 

இந்நிலையில் அந்த அணியின் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் உருக்கமான விடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “இன்று நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். ஏனெனில் வெற்றிக்கு மிக அருகில் நாங்கள் இருந்தோம். நான் பல அணிகளில் விளையாடியுள்ளேன்.

ஆனால் பெங்களுரூ அணிதான் அதிக ரசிகர்களைக் கொண்டது. ஆடுகளத்தில் நான் பெற்ற மகிழ்ச்சியை வேறு எங்கும் பெற்றதில்லை. ஆர்சிபி அணியின் ரசிகர்களுக்கு நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருப்பேன். சமூக வலைத்தளங்களில் இருந்து ரசிகர்களிடம் நேர்மையான எண்ணங்களை பெற்றுள்ளேன். அடுத்த சீசனில் வெற்றி பெற கடுமையாக உழைப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com