உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஜெர்ஸி: கின்னஸ் சாதனை படைத்த ஐபிஎல் 2022

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஜெர்ஸியை உருவாக்கியதன் மூலம் ஐபிஎல் 2022 உலக சாதனை படைத்துள்ளது. ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற்று வரும் நரேந்திர மோடி திடலில் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியிலுள்ள நரேந்திர மோடி திடலில் நடைபெற்று வருகிறது.

ஐபிஎல் இறுதிப் போட்டியின் தொடக்க நிகழ்ச்சி மாலை 6 மணியளவில் கோலாகலமாகத் தொடங்கியது. இதில் பாலிவுட் நடிகர்கள் பலர் பங்கேற்று நடனமாடினர். 

ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தலைமையில் இசைக்கச்சேரி நடைபெற்றது. இதில் பாடகர்கள் பென்னி தயாள், ஸ்வேதா மோகன், ஏ.ஆர்.அமீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் பெறும் சவுரவ் கங்குலி,  ஜெய் ஷா
கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் பெறும் சவுரவ் கங்குலி,  ஜெய் ஷா

இந்நிலையில், இதற்கு முன்பாக உலகின் மிகப்பெரிய ஜெர்ஸி திடலில் காட்சிப்படுத்தப்பட்டது. ஐபிஎல் 15வது ஆண்டாக நடைபெற்று வருவதைக் குறிக்கும் வகையில் வெண்மை நிறத்தில் காணப்பட்டது. இந்த சீசனின் பங்கேற்ற அணிகளின் எம்பலங்களும் இடம்பெற்றன. இது உலகிம் மிகப்பெரிய ஜெர்ஸி என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது.

கின்னஸ் சாதனைக்கான சான்றிதழை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர்  ஜெய் ஷா உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com