தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

அவர் எதுவும் கற்றுக்கொள்ளவில்லை: ஷிவம் டுபேவின் பந்துவீச்சை விமர்சனம் செய்த கவாஸ்கர்

சிஎஸ்கே அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்த ஷிவம் டுபேவின் பந்துவீச்சை முன்னாள் வீரர் கவாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார்.

News image
Updated On :1 ஏப்ரல் 2022, 12:42 pm IST

சிஎஸ்கே அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்த ஷிவம் டுபேவின் பந்துவீச்சை முன்னாள் வீரர் கவாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார்.

மும்பையில் நேற்று நடைபெற்ற சென்னை - லக்னெள அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் லக்னெள அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. டாஸ் வென்ற லக்னெள, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது. உத்தப்பா 50, ஷிவம் டுபே 49 ரன்கள் எடுத்தார்கள். அவேஷ் கான், பிஸ்னோய், டை ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். கடினமான இலக்கை நன்கு விரட்டிய லக்னெள அணி, 19.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ராகுல் 40, குயிண்டன் டி காக் 61, எவின் லூயிஸ் ஆட்டமிழக்காமல் 55 ரன்கள் எடுத்தார்கள். 

கடைசி இரு ஓவர்களை ஷிவம் டுபேவும் முகேஷ் செளத்ரியும் வீசியது லக்னெள அணிக்கு வசதியாக இருந்தது. 19-வது ஓவரை வீசிய டுபே, 25 ரன்களைக் கொடுத்தார். இதனால் சென்னையின் அணியின் முடிவுகளைப் பலரும் விமர்சித்துள்ளார்கள். 

 ஐபிஎல் போட்டியில் முதல்முறையாக முதல் இரு ஆட்டங்களில் தோற்றுள்ளது சிஎஸ்கே.

இந்நிலையில் 19-வது ஓவரில் மோசமாகப் பந்துவீசிய ஷிவம் டுபேவின் பந்துவீச்சைத் தொலைக்காட்சி வர்ணனையில் விமர்சனம் செய்தார் முன்னாள் வீரர் சுநீல் கவாஸ்கர். அவர் கூறியதாவது:

ஓரளவு வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் டுபே விளையாடியுள்ளார். இருந்தாலும் இன்னும் அவர் லென்த் பந்துகளை வீசிக்கொண்டிருக்கிறார். இந்தப் பந்துவீச்சுக்குக் கட்டாயம் தண்டனை உண்டு. அதேபோல இதுவரை பந்து வீசாதவரை அழைத்து வந்து 19-வது ஓவரை வீசச்சொன்னால் அது நியாயம் அல்ல. இந்தச் சமயத்தில் தான் அதிரடியாக விளையாட பேட்டர்கள் தயாராக உள்ளார்கள். டுபே மெதுவான பந்துகளையும் வீசுகிறார். ஆனால் அவ்வகைப் பந்துகள் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களில் தான் உதவியாக இருக்கும். ஆனால் இந்த ஆடுகளத்தில் பந்து அழகாக பேட்டுக்கு வருகிறது. இங்கு அந்தப் பந்துவீச்சு எடுபடாது. கடைசியில் யார் பந்துவீச வேண்டும் என்கிற சிஎஸ்கேவின் கணக்கு தவறாகி விட்டது. பேட்டிங் ஆடுகளத்தில் லென்த் பந்துகளை வீசுகிறார் டுபே. அவர் எதுவும் கற்றுக்கொள்ளவில்லை என்பது நிச்சயம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.