ஐபிஎல் போட்டியில் முதல்முறையாக: புதிய சிக்கலில் சிஎஸ்கே

ஐபிஎல் போட்டியில் முதல் இரு ஆட்டங்களிலும் சிஎஸ்கே தோற்றதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
ஐபிஎல் போட்டியில் முதல்முறையாக: புதிய சிக்கலில் சிஎஸ்கே

ஐபிஎல் போட்டியில் முதல் இரு ஆட்டங்களிலும் சிஎஸ்கே தோற்றதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

இப்போதுதான் முதல்முறையாக அது நடந்துள்ளது. 

மும்பையில் நேற்று நடைபெற்ற சென்னை - லக்னெள அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் லக்னெள அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. டாஸ் வென்ற லக்னெள, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது. உத்தப்பா 50, ஷிவம் டுபே 49 ரன்கள் எடுத்தார்கள். அவேஷ் கான், பிஸ்னோய், டை ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். கடினமான இலக்கை நன்கு விரட்டிய லக்னெள அணி, 19.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ராகுல் 40, குயிண்டன் டி காக் 61, எவின் லூயிஸ் ஆட்டமிழக்காமல் 55 ரன்கள் எடுத்தார்கள். 

கடைசி இரு ஓவர்களை ஷிவம் டுபேவும் முகேஷ் செளத்ரியும் வீசியது லக்னெள அணிக்கு வசதியாக இருந்தது. 19-வது ஓவரை வீசிய டுபே, 25 ரன்களைக் கொடுத்தார். இதனால் சென்னையின் அணியின் முடிவுகளைப் பலரும் விமர்சித்துள்ளார்கள். 

இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் முதல்முறையாக முதல் இரு ஆட்டங்களில் தோற்றுள்ளது சிஎஸ்கே.

2009, 2010, 2012, 2013, 2014, 2021 ஆகிய ஆண்டுகளில் தோனி தலைமையில் விளையாடிய சிஎஸ்கே அணி, முதல் ஆட்டத்தில் தோற்றாலும் 2-வது ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் போட்டியை நல்லவிதமாக ஒவ்வொரு வருடமும் தொடங்கும். முதல் ஆட்டத்தில் தோற்றாலும் 2-வது ஆட்டத்தில் வெற்றி நிச்சயம் என்றுதான் இத்தனை ஆண்டுகளாக விளையாடி வந்தது.

இந்தமுறை ஜடேஜா தலைமையில் களமிறங்கியுள்ள சிஎஸ்கே அணி, புதிய அனுபவத்துடன் போட்டிக்குள் நுழைந்துள்ளது. முதல் இரு ஆட்டங்களில் இதுவரை ஒருமுறை கூட தோற்காத சிஎஸ்கே இம்முறை மட்டும் முதல் இரு ஆட்டங்களிலும் தோற்றதால் அடுத்து எப்படி மீண்டு வரப் போகிறது என்கிற கவலை சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. சிஎஸ்கேவின் பந்துவீச்சு இரு ஆட்டங்களிலும் பெரிய கவலை அளிக்கும் விதமாக உள்ளது. கடந்த வருடம் சிஎஸ்கே அணியில் ஹேசில்வுட், தீபக் சஹார், ஷர்துல் தாக்குர் போன்றோர் இருந்தார்கள். இம்முறை ஹேசில்வுட், ஷர்துல் தாக்குர் சிஎஸ்கே அணியில் இல்லை. காயம் காரணமாக தீபக் சஹார் எப்போது மீண்டும் விளையாடுவார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இப்படி ஆரம்பமே ஜடேஜாவுக்குப் பெரிய சிக்கலை வரவழைத்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com