ஐபிஎல் 2022 போட்டியில் தடுமாறும் மூன்று சாம்பியன்கள்

இந்த மூன்று அணிகளும் இந்த வருட ஐபிஎல் போட்டியில் மிகவும் தடுமாறி வருகின்றன...
ஐபிஎல் 2022 போட்டியில் தடுமாறும் மூன்று சாம்பியன்கள்

மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் அணி

2015 முதல் இந்த மூன்று அணிகளே ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளன.

மும்பை இந்தியன்ஸ் (2015, 2017, 2019, 2020)
சென்னை சூப்பர் கிங்ஸ் (2018, 2021)
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2016)

கொடுமை என்னவென்றால் இந்த மூன்று அணிகளும் இந்த வருட ஐபிஎல் போட்டியில் மிகவும் தடுமாறி வருகின்றன. இந்த மூன்று அணிகளாலும் இதுவரை ஒரு வெற்றியும் பெற முடியவில்லை.

மும்பை: 3 ஆட்டங்கள் - 0 வெற்றி - 3 தோல்விகள் - 0 புள்ளி
சென்னை: 3 ஆட்டங்கள் - 0 வெற்றி - 3 தோல்விகள் - 0 புள்ளி
சன்ரைசர்ஸ்: 2 ஆட்டங்கள் - 0 வெற்றி - 2 தோல்விகள் - 0 புள்ளி

இந்த வருடம் விளையாடும் 10 அணிகளில் முதல் 5 இடங்களில் ஐபிஎல் போட்டிக்குள் புதிதாக நுழைந்த லக்னெள, குஜராத் அணிகள் இடம்பெற்றுள்ளன. குஜராத் 3-ம் இடத்திலும் 5-ம் இடத்தில் லக்னெளவும் உள்ளன. 

ஐபிஎல் தொடங்கி கிட்டத்தட்ட இரு வாரம் ஆகப்போகிறது. ஆனால் சென்னை, மும்பை, ஹைதராபாத் ஆகிய மூன்று அணிகளாலும் இதுவரை ஒரு வெற்றியும் பெற முடியவில்லை என்பது அவற்றின் ரசிகர்களுக்குத் துயரச் செய்தியாக உள்ளன. ஆனால் போட்டியின் சுவாரசியத்துக்கு இந்த நிலை மிகவும் உதவுகிறது. எப்போதும் மும்பையும் சென்னையும் ஜெயித்துக் கொண்டிருப்பது இதர அணி ரசிகர்களிடையே சோர்வை உண்டாக்கும். இம்முறை புதிய அணிகள் நன்றாக விளையாடுவதோடு கடந்த வருடங்களில் சொதப்பிக் கொண்டிருந்த அணிகள் (முக்கியமாக ராஜஸ்தான்) இம்முறை புதிய உற்சாகத்துடன் விளையாடுவதால் ஐபிஎல் போட்டிக்குப் புதிய வண்ணம் கிடைத்துள்ளது.

சாம்பியன் அணிகள் இதேபோல எப்போதும் விளையாடும் எனச் சொல்ல முடியாது. இந்த அணிகளுக்கு மீண்டெழுவது எப்படி என்று நன்குத் தெரியும். கீழே விழுந்த அணிகள் மேலே எழும்போது போட்டி மேலும் சுவாரசியம் ஆகும். காத்திருப்போம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com