பட்லர்
பட்லர்

ஐபிஎல் 2022: அதிக சிக்ஸர்கள் அடித்த அணிகளின் பட்டியலில் ஓர் ஆச்சர்யம்!

இந்த வருடம் அதிக சிக்ஸர்கள் அடித்த அணியாக உள்ளது, ராஜஸ்தான் ராயல்ஸ்.

ஐபிஎல் 2022 போட்டி தொடங்கி இரண்டு வாரங்களாகியுள்ளன. குஜராத், சன்ரைசர்ஸ் தவிர எல்லா அணிகளும் குறைந்தது தலா 3 ஆட்டங்களில் விளையாடியுள்ளன. கேகேஆர், லக்னெள அணிகள் தலா 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.

இந்த வருடம் அதிக சிக்ஸர்கள் அடித்த அணியாக உள்ளது, ராஜஸ்தான் ராயல்ஸ். அந்த அணி இதுவரை 36 சிக்ஸர்களை அடித்துள்ளது. பஞ்சாப் அணி 33 சிக்ஸர்கள், ரஸ்ஸல், கம்மின்ஸ் என அதிரடி வீரர்களைக் கொண்ட கொல்கத்தா அணி 30 சிக்ஸர்களுடன் பட்டியலில் 3-ம் இடத்தில் உள்ளது.

இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் தோல்வியே காணாத அணி, குஜராத் மட்டுமே. இதுவரை விளையாடிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மற்ற எல்லா அணிகளும் குறைந்தது ஓர் ஆட்டத்திலாவது தோற்றுள்ளன. ஆனால் அதிக சிக்ஸர்கள் அடித்த அணிகளின் பட்டியலில் குஜராத் கடைசி இடத்தில் தான் உள்ளது. ஹைதராபாத்தைத் தவிர்த்து மற்ற அணிகளைப் போல குஜராத் குறைந்தது 3 ஆட்டங்களில் விளையாடியிருந்தால் பட்டியலில் நிச்சயம் முதல் ஐந்து இடங்களுக்குள் வந்திருக்கும். அதேசமயம் பல ஹிட்டர்களைக் கொண்ட தில்லி அணி இதுவரை 14 சிக்ஸர்கள் மட்டுமே அடித்துள்ளது. ஓர் இன்னிங்ஸுக்கு 5 சிக்ஸர்கள் கூட இல்லை. 

ஐபிஎல் 2022: அதிக சிக்ஸர்கள்

ராஜஸ்தான் - 36 சிக்ஸர்கள் (3 ஆட்டங்கள்)
பஞ்பாப் - 33 சிக்ஸர்கள் (3 ஆட்டங்கள்)
கொல்கத்தா - 30 சிக்ஸர்கள் (4 ஆட்டங்கள்)
லக்னெள - 25 சிக்ஸர்கள் (4 ஆட்டங்கள்)
மும்பை - 23 சிக்ஸர்கள் (3 ஆட்டங்கள்)
பெங்களூர் - 23 சிக்ஸர்கள் (3 ஆட்டங்கள்)
சென்னை - 18 சிக்ஸர்கள் (3 ஆட்டங்கள்)
தில்லி - 14 சிக்ஸர்கள் (3 ஆட்டங்கள்)
ஹைதராபாத் - 11 சிக்ஸர்கள் (2 ஆட்டங்கள்)
குஜராத் - 10 சிக்ஸர்கள் (2 ஆட்டங்கள்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com