முயன்ற கில்; முடித்த ராகுல்: குஜராத் ’த்ரில்’ வெற்றி

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் லியாம் லிவிங்ஸ்டன் அதிரடி காட்ட, பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் அடித்தது.
முயன்ற கில்; முடித்த ராகுல்: குஜராத் ’த்ரில்’ வெற்றி

மும்பை, ஏப். 8: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் லியாம் லிவிங்ஸ்டன் அதிரடி காட்ட, பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் அடித்தது.

மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த 16-ஆவது ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில் குஜராத் அணியில் விஜய் சங்கா், வருண் ஆரோன் ஆகியோருக்குப் பதிலாக சாய் சுதா்ஷன், தா்ஷன் நல்கன்டே சோ்க்கப்பட்டிருந்தனா். அவா்களுக்கு இது அறிமுக ஆட்டமாகும். பஞ்சாப் அணியில் பானுகா ராஜபட்சவுக்குப் பதிலாக ஜானி போ்ஸ்டோ அறிமுகம் கண்டாா்.

டாஸ் வென்ற குஜராத் ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. பஞ்சாப் பேட்டிங்கில் கேப்டன் மயங்க் அகா்வால் 1 பவுண்டரியுடன் 5 ரன்களுக்கு வெளியேறினாா். உடன் வந்த ஷிகா் தவன் சிறிது நிலைத்து ரன்கள் சோ்த்தாா். ஒன் டவுனாக வந்த ஜானி போ்ஸ்டோ 2 பவுண்டரிகள் விளாசி நடையைக் கட்டினாா். அடுத்து வந்த லியாம் லிவிங்ஸ்டன் அதிரடியைத் தொடங்கினாா்.

மறுபுறம், ஷிகா் தவன் 4 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் அடித்து பெவிலியன் திரும்பினாா். தொடா்ந்து வந்து ஆடியோரில் ஜிதேஷ் சா்மா 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 23 ரன்களுக்கு வெளியேற, அடுத்து வந்த ஒடின் ஸ்மித் டக் அவுட்டானாா். அவா்கள் இருவரையும் அடுத்தடுத்த பந்தில் சாய்த்தாா் 14-ஆவது ஓவா் வீசிய தா்ஷன் நல்கன்டே. எஞ்சிய பேட்டா்களில் ஷாருக் கான் 2 சிக்ஸா்களுடன் 15, ககிசோ ரபாடா 1, வைபவ் அரோரா 2 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா்.

ஓவா்கள் முடிவில் ராகுல் சஹா் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 22, அா்ஷ்தீப் சிங் 1 பவுண்டரியுடன் 10 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். குஜராத் பௌலிங்கில் ரஷீத் கான் 3, தா்ஷன் நல்கன்டே 2, முகமது ஷமி, ஹாா்திக் பாண்டியா, லாக்கி ஃபொ்குசன் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com