கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஐபிஎல்: கடைசி ஓவர்களில் சிறப்பாகவும் மோசமாகவும் பந்துவீசிய வீரர்கள் யார் யார்?

இதுவரை நடைபெற்ற ஐபிஎல் ஆட்டங்களில் 29 ஆட்டங்களின் முடிவில் இந்த வருடம் தான்...

News image
சிராஜ்
Updated On :18 ஏப்ரல் 2022, 11:24 am

DIN

ஐபிஎல் 2022 போட்டியில் கடைசி நான்கு ஓவர்களில் குறைந்த ரன்கள் கொடுத்த வீரராக பஞ்சாப் அணியின் அர்ஷ்தீப் உள்ளார். அதேசமயம் ஆர்சிபி அணியின் சிராஜ் அதிக ரன்களை கொடுப்பதில் முன்னணியில் உள்ளார்.

ஐபிஎல் போட்டியில் இதுவரை 29 ஆட்டங்கள் முடிந்துள்ளன. பெரும்பாலான ஆட்டங்களில் ஆட்ட முடிவை கடைசி ஓவர்களே நிர்ணயிக்கின்றன. ஆரம்பத்தில் எவ்வளவு மோசமாக விளையாடினாலும் கடைசி ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசிய அல்லது அதிக ரன்கள் எடுத்த அணிகளே அதிகளவு வெற்றியைப் பெற்றுள்ளன. 

இதுவரை நடைபெற்ற ஐபிஎல் ஆட்டங்களில் 29 ஆட்டங்களின் முடிவில் இந்த வருடம் தான் கடைசி நான்கு ஓவர்களில் (17-20) அதிக ரன்களை பேட்டர்கள் எடுத்துள்ளார்கள். இந்த வருடக் கடைசி நான்கு ஓவர்களின் ரன்ரேட் - 11.53. அதாவது கடைசி நான்கு ஓவர்களில் சராசரியாக 47 ரன்களை அடித்துள்ளார்கள். 

ஐபிஎல் 2022: குறைந்த ரன்கள் கொடுத்த பந்துவீச்சாளர்கள் (குறைந்தது நான்கு ஓவர்கள்)

அர்ஷ்தீப் சிங் - 5.25 எகானமி
நரைன்: 6.25
பிராவோ - 8.08

ஐபிஎல் 2022: அதிக ரன்கள் கொடுத்த பந்துவீச்சாளர்கள் (குறைந்தது நான்கு ஓவர்கள்)

சிராஜ் - 16.00 எகானமி
ஜோர்டன் - 14.27
பிரசித் கிருஷ்ணா - 12.57

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.