ஐபிஎல்: புவனேஸ்வர் குமார் புதிய சாதனை

ஐபிஎல் போட்டியில் 150 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர்...
ஐபிஎல்: புவனேஸ்வர் குமார் புதிய சாதனை

ஐபிஎல் போட்டியில் 150 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்கிற பெருமையை சன்ரைசர்ஸ் அணியின் புவனேஸ்வர் குமார் பெற்றுள்ளார். 

நவி மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 151 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. உம்ரான் மாலிக் 4 விக்கெட்டுகளும் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். இதன்பிறகு பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி, 18.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. உம்ரான் மாலிக் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த ஆட்டத்தில் சில சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் புவனேஸ்வர் குமார்.

இதற்கு முன்பு, ஐபிஎல் ஆட்டத்தில் பவர்பிளே பகுதியில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்கிற பெருமையை ஜாகீர் கான் பெற்றிருந்தார், 52 விக்கெட்டுகளுடன். நேற்றைய ஆட்டத்தில் அச்சாதனையைத் தாண்டிச் சென்றுள்ளார் புவனேஸ்வர். தற்போது, 53 விக்கெட்டுகளுடன் பவர்பிளேயில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்கிற சாதனையை அடைந்துள்ளார். 

பவர்பிளேயில் அதிக விக்கெட்டுகள்

புவனேஸ்வர் குமார் - 53 விக்கெட்டுகள்
ஜாகீர் கான் - 52 விக்கெட்டுகள்
சந்தீப் சர்மா - 52 விக்கெட்டுகள்
உமேஷ் யாதவ் - 51 விக்கெட்டுகள் 

ஐபிஎல் போட்டியில் 150 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் புவனேஸ்வர் குமார். 2-வது இடத்தில் உள்ள பும்ரா, 134 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர்களில் பிராவோ, 177 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார். 

ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட்டுகள்: இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள்

புவனேஸ்வர் குமார் - 150 விக்கெட்டுகள்
பும்ரா - 134 விக்கெட்டுகள்
உமேஷ் யாதவ் - 129 விக்கெட்டுகள் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com